கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டத்தை தொடர முடிவு...

published 14 hours ago

கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள் ஆட்சியருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி- போராட்டத்தை தொடர முடிவு...

கோவை: விசைத்தறி உரிமையாளர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையி போராட்டத்தை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.

மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரி பாகங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப புதிய கூலி உயர்வு கோரி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறியாளர்கள் கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தோல்வி அடைந்ததாகவும், அதில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதாக தகவல் தெரிவித்தனர். 

இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகி பூபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசும் போது :

இன்று 28 வது நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, கோவை மாவட்ட ஆட்சியரும் தொழிலாளர் நலத்துறையும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து இருந்தனர். அழைப்பை ஏற்று இன்று பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டோம். மாவட்ட ஆட்சியரும் தொழிலாளர் நலத்துறை ஆணையரும் பல்வேறு விளக்கங்களை கொடுத்து உள்ளனர். 

நேற்று ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து பேசி உள்ளதையும், தெளிவாக தெரிவித்தார்கள். இந்த பேச்சு வார்த்தையில் மட்டும் தான் எங்களுக்கு ஒரு சிறிய அளவு முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. மேலும் நாங்கள் வைத்து இருக்கும் கோரிக்கைக்கும் ,  ஜவுளி உற்பத்தியாளர்கள் சொல்வதற்கும் இடைவெளி உள்ளது.

அதனால் ஜவுளி உற்பத்தியாளர்களை மீண்டும் அழைத்து, மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, நியாயமான முடிவை பெற்று தர வேண்டும்.  நீங்கள் தற்போது எவ்வளவு கேட்கிறீர்கள்? அவர்கள் எவ்வளவு கொடுப்பதாக கூறுகிறார்கள் என்று கேள்விக்கு,

நாங்கள் அறுவது சதவீதம் கேட்டு இருந்தோம், அதிலும் குறிப்பிட்ட கணிசமான தொகையை குறைத்து கீழே இறங்கி வந்து இருக்கிறோம். ஜவுளி உற்பத்தியாளர்கள் சிறிய அளவு உயர்வு கொடுப்பதாக மாவட்ட நிர்வாகத்திடம் உத்தரவாதம் அளித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கொடுப்பது எங்களுடைய தொழிலை பாதுகாத்துக் கொள்ளும் அளவு இல்லை. ஒரு கணிசமான வியர்வை இருந்தால் மட்டுமே, விசைத்தறி தொழிலை பாதுகாக்க முடியும் என்பதை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளோம் என்று கூறினார்.

அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, இன்றைய தினம் வரை வேலை நிறுத்தம் தொடர்கிறது, அடுத்ததாக எங்களுடைய கூட்டமைப்பை மீண்டும் கூட்டி, அடுத்த கட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

ஐந்தாவது நாளாக இன்று உண்ணாவிரத போராட்டம்  செய்து கொண்டு இருக்கிறீர்கள் இதை எப்பொழுது முடிப்பீர்கள் என்ற கேள்விக்கு, எங்களுடைய கூட்டமைப்பு கூடி விவாதித்து அடுத்த கட்ட முடிவெடுப்போம் என்று கூறினார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பற்றி மாவட்ட ஆட்சியர் இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் அடுத்துக்கட்ட பேச்சுவார்த்தையை விரைவில் நடத்தி எங்களுக்கு ஒரு சுமுக தீர்வு கண்டு கொடுக்க வேண்டும்.

மாவட்ட நிர்வாகம் எந்த அளவுக்கு உங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உள்ளது என்ற கேள்விக்கு,

நாங்கள் கேட்ட கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக கூறி உள்ளனர் எனக் கூறினார். சில விஷயங்களை பொதுவெளியில் கூற முடியாது. மாவட்ட ஆசிரியர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கணிசமான தொகையை பெற்று தருவதாக இன்று உறுதி அளித்து இருக்கிறார். அது எங்களுக்கு போதாது என்பதால் மட்டுமே, அதனால் அடுத்த கட்டமாக எங்களுடைய கூட்டமைப்பு கூடி, நீங்க செய்யப்படும். இன்றைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அதேபோல ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத் தறி என மாவட்ட நிர்வாகம் தனித் தனியாக தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கிறது. அதுவாக என்னிடம் கலந்து பேசி அடுத்த முடிவை கூறுகிறோம் என கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe