பேரூரா... பட்டீசா... கோவையில் விமர்சையாக நடைபெற்ற பேரூர் கோவில் தேரோட்டம்..

published 1 week ago

பேரூரா... பட்டீசா... கோவையில் விமர்சையாக நடைபெற்ற பேரூர் கோவில் தேரோட்டம்..

கோவை: கோவையில் பிரசித்தி பெற்ற முத்தி தளமாக விளங்க கூடிய பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் துவங்கியது. 

நேற்றைய தினம்  இரவு பட்டீசுவரர் திருக்கல்யாண உற்சவம் முடிந்ததையடுத்து அலங்கரிக்கப்பட்ட தேரில் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோர் தனித் தனியே தேரில் எழுந்தருளினர்.

தொடர்ந்து பேரூர் ஆதீனம் மருவாசல அடிகளார் தேறினை வடம் பிடித்து  கொடுக்க  பின்னர் தேரை பக்தர்கள் பேரூரா, பட்டீசா என முழக்கங்களுடன் இழுத்தனர்.  
முன்னதாக தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பட்டக்காரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த தோரோட்டமானது 
சிறுவாணி சாலை மற்றும் கோவிலின் மேற்கு, தெற்கு, வடக்கு ரத வீதிகள் வழியாக சென்று மீண்டும் தேர் நிலை திடலை அடையும். 
தேரோட்டத்தை முன்னிட்டு இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர் மேலும் போக்குவரத்து இப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe