கோவையில் யானை தந்தம், சிறுத்தையின் பற்கள், நகம் விற்க முயற்சி!!

published 1 week ago

கோவையில் யானை தந்தம், சிறுத்தையின் பற்கள், நகம் விற்க முயற்சி!!

கோவை: கோவையில் யானை தந்தம், சிறுத்தையின் பற்கள், நகம் விற்க முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேட்டூரில் இருந்து யானை தந்தம் விற்க ஒரு கும்பல் கோவை வருவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, காந்திபுரம் ராம் நகர் பகுதியில் பதுங்கியிருந்த 4 பேர் கொண்ட கும்பலை வனத்துறையினர் கைது செய்தனர். 

அவர்களிடம் நடத்திய விசாரணையில், யானையின் தந்தம், சிறுத்தையின் பற்கள் மற்றும் நகங்களை கோவையில் விற்க முயன்றது தெரியவந்தது.  

தொடர்ந்து, அவர்களிடம் இருந்த பொருட்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், கிருபா, சதீஷ்குமார், விஜயன், கவுதம் ஆகிய 4 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe