கோவையில் நடைபெற்ற கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் விளையாட்டு போட்டிகள்- முதல் இடத்தை தட்டி சென்ற பெங்களூரு...

published 5 days ago

கோவையில் நடைபெற்ற கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் விளையாட்டு போட்டிகள்- முதல் இடத்தை தட்டி சென்ற பெங்களூரு...

கோவை: மத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் கோவையில் இயங்கி வரும் கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேரு மைதானத்தில் நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த 27 ஆராய்ச்சி மையங்களில் இருந்து 977 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஓட்டப் பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல் உள்ளிட்ட அத்லெட்டிக் பிரிவு போட்டிகளும், கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும், கேரம்போர்டு, செஸ் உள்ளிட்ட உள்விளையாட்டு போட்டிகள் என மொத்தம் 37 போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ஆராய்ச்சி நிறுவனம் டெல்லி அலுவலகத்தின் துணை இயக்குனர் முனைவர் டி.கே.யாதவா கலந்து கொண்டு கோப்பைகளை வழங்கினார்.

இதில் அதிக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் அதிக பரிசுகள் பெற்றவர்களுக்கும் சாம்பியன் கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில் முதல் இடத்தை பெங்களூருவை சேர்ந்த ஆராய்ச்சி மையம் தட்டி சென்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe