கே.சி.பி தொடர்ந்த வழக்கு- எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன் அனுப்பிய கோவை நீதிமன்றம்...

published 1 day ago

கே.சி.பி தொடர்ந்த வழக்கு- எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன் அனுப்பிய கோவை நீதிமன்றம்...

கோவை: நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது குறித்து  2024 ம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருந்தார். 

அதில் எடப்பாடி பழனிச்சாமியை குறிப்பிட்டிருந்தது  தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கே.சி.பழனிசாமி அதிமுக உறுப்பினரே கிடையாது ,  ரோட்டில் போபவர் வருபவர் எல்லாம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஆகிவிட முடியாது என்று தெரிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது , கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில்    கே.சி.பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணயில்  விசாரணை நடத்துவதற்கான முகாந்திரம் இருப்பது உறுதியானதை தொடர்ந்து இன்று கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு  வந்தது.

அப்போது கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜரான நிலையில் குற்றவியல் அவதூறு வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்திரவிடப்பட்டது.
 

வருகின்ற 15ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன்  அனுப்ப உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை 15 ம் தேதிக்கு  ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe