2026ல் கோவையில் பத்துக்கு பத்து வெல்வோம்- வானதி சீனிவாசன்...

published 14 hours ago

2026ல் கோவையில் பத்துக்கு பத்து வெல்வோம்- வானதி சீனிவாசன்...

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாடு நிதியின் கீழ் நோயாளிகளின் உறவினர்களுக்கு காத்து இருக்க, காத்தருப்போர் அறை திறப்பு விழாவிற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

 பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசும்போது :-

சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் காத்திருப்பு அறை கட்டி அதை இன்று பொதுமக்களுக்காக அர்ப்பணித்து இருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன்பாக நான் கோவை அரசு மருத்துவமனைக்கு இங்கு இருக்கக் கூடிய, குறிப்பாக பச்சிளம் குழந்தைகள் மற்றும் பிரசவ வார்டை பார்ப்பதற்காக, வசதிகள் சிகிச்சை பற்றி பார்ப்பதற்காக வந்து இருந்தேன். 

 

அப்படி வந்து ருந்த போது பொதுமக்கள் தங்களுடைய பெண் பிள்ளைகளை பிரசவ வார்டுக்கு உள்ளே அனுப்பிவிட்டு வெளியே மழை, வெயில், குளிர் என காத்து கிடந்தனர். அவர்கள் காத்து இருக்க அறைகள் எதுவும் இல்லாமல் இருந்தது, அதை பார்த்து விட்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து காத்து இருக்கும் அறை ஒன்று கட்டி தருவதற்காக மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் கேட்டேன், உடனடியாக அவர்களும் இந்த இடத்தை ஆய்வு செய்து இந்த இடத்தில் தாராளமாக கட்டலாம் என ஒதுக்கீடு செய்து கொடுத்தார். 

அதனால் பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து நல்ல முறையில், காத்திருப்பு அறை அமைத்துக் கொடுத்து இருக்கிறோம். இதனால் பிரசவத்திற்கு செல்லும் பெண்களின் குடும்பத்தார் இந்த காத்திருக்கும் அறையில், வசதியான முறையில் தங்கிக் கொள்ளலாம். அவர்களுக்கு அருகிலேயே குடி தண்ணீர், கழிப்பிட வசதி ஆகியவை செய்யப்பட்டு இருக்கிறது. ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இதை செய்து கொடுப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே கோவை அரசு மருத்துவமனைக்கு, ஒரு புதிய மருத்துவமனை கட்டிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அந்தக் கட்டிடம் கூட 2024 ஆம் வருடம் திறந்து வைக்கப்பட்டது. 

ஆனாலும் கூட
கோவை அரசு மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை என்பது மிகுந்த நெருக்கடியை கொடுக்கிறது, ஏனென்றால் உள்ளே இருக்கும் அறைகள் எல்லாமே பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல், கூடுதலாக கட்டிடங்கள் வரும்பொழுது, இட நெருக்கடி அதிகமாகி, குறிப்பாக மருத்துவமனைக்கு வரக் கூடிய மருத்துவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு கூட இடமில்லாமல் ஆகிவிட்டது. இது தொடர்பாக தற்போது நடந்து கொண்டு இருக்கும் சட்டமன்ற கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பினேன். 

அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் அவர்கள் மல்டி லெவல் கார் பார்க்கிங் ஒன்று அமைத்து தருவதற்கு அரசு உத்தேசித்து இருக்கிறது என்ற பதிலை எனக்கு கொடுத்தார். ஆனால் இங்கு இருக்கக் கூடிய நிறைய கட்டிடங்கள் மிகுந்த பழமையான கட்டிடங்கள். இவற்றையெல்லாம் அகற்றி விட்டு இந்த இடத்திலே அடித்தளத்தில் வாகனங்களை நிறுத்துவதற்கு, பல மாடி கட்டிடங்களை அமைத்தால் இன்னும் கூட அரசு மருத்துவமனைக்கு நிறைய நோயாளிகள் வர முடியும். அவர்களுக்கு வசதியாக சிகிச்சை பெற்று செல்ல முடியும். இதற்கான ஒரு திட்டத்தை, கோரிக்கையை நான் மாநில சுகாதாரத் துறை அமைச்சரிடமும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி நட்டா - விடமும் கொடுக்க இருக்கிறேன். 

இது தொடர்பான ஆவணங்கள் திட்டத்தை எப்படி அமைக்கலாம் என்பது குறித்து பொது பணித் துறை அதிகாரிகள் எனக்கு ஆவணங்களை கொடுக்க தயாராக இருக்கிறார்கள். நிச்சயமாக கோவை அரசு மருத்துவமனைக்கு இன்னும் அதிகமான வசதிகளோடு கூடுதல் சிகிச்சை பெறக் கூடிய அளவிலே புதிய மாற்றுத் திட்டம் இருந்தாலும் கூட, அதில் என்னுடைய பங்களிப்பை கொடுக்க தயாராக இருக்கிறேன். இன்று கோவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக் கூடிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை வர இருக்கிறார். நேற்று காலையில் இருந்து தமிழகத்தின் சுற்றுப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். நேற்று காலை செங்கல்பட்டு மாலை வேலூர், இன்று காலை சேலம் மாலை கோவை என தொடர்ச்சியாக கட்சியினுடைய நிர்வாகிகளை பொது மக்களை சந்திப்பதற்காக மாநில தலைவரின் சுற்றுப்பயணம் சூறாவளி சுற்றுப் பயணமாக நடந்து கொண்டு இருக்கிறது. 

தேர்தல் வரை இருக்கிறது தேர்தலுக்கான தயாரிப்பு பணிகள் நிர்வாகிகள் நியமனம் பூத்தளவில் கட்சியை வலுப்படுத்துவது, வியூகங்கள் அமைப்பது, தலைமை கொடுக்கும் பணிகள் செய்வது என பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் போல சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டு இருக்கிறது. இன்று மாலை வரக் கூடிய மாநில தலைவருக்கு உற்சாக வரவேற்பு கொடுப்பதற்காக கோவையின் நிர்வாகிகள் அனைவரும் ஏற்பாட்டில் இருந்து கொண்டு இருக்கிறோம்.. 

அதுமட்டுமில்லாமல் இந்த பகுதியில் உடைய பல்வேறு பிரச்சனைகளை சட்டப் பேரவைக்கு தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். ஒரு சிலவற்றை நிறைவேற்றி தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து இருக்கிறார்கள். கொடுத்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள் என காத்து இருக்கிறோம். இது மட்டுமல்லாமல் கோவையில் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக இன்னும் கூட புதிதாக நிறைய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என வைக்கிறோம். கொங்கு மண்டலத்திற்கான புதிய அறிவிப்புகள் வரும் என பொதுமக்களை போலவே நானும் காத்தது இருக்கிறேன் என கூறினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர்கள் ஒருவிதமாக பேசிக் கொண்டு இருக்கிறார்கள், இப்போது அந்த கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் கூட கேவலமான முறையில் அருவருக்கத்தக்க வகையில் பேசிக் கொண்டு இருப்பதை பார்க்கிறோம். இன்று பல்வேறு அமைப்புகள் குறிப்பாக பெண்கள் அமைப்புகள் எல்லாம் இதற்காக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். மாநிலத்தின் முதல்வரே அந்த பேச்சை சகிக்க முடியாமல் அவரை  கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடுத்து இருக்கிறார். 

ஒரு காலத்தில் குறிப்பிட்ட மதத்தை அவதூறு செய்வது, ஒரு குறிப்பிட்ட சமூகத்தை கேவலமாக பேசுவது, என்று இருப்பதையெல்லாம் இப்போது மக்களோடு ரியாக்ஷனை பார்த்து விட்டு அதற்கு நடவடிக்கை எடுக்க கூடிய அளவுக்கு மாறுதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் கூட தொடர்ச்சியாக அவர்கள் அப்படியே தான் போய்க் கொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய எதிர்ப்பை கண்டனத்தை பதிவு செய்து கொண்டே இருக்கிறோம். சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எங்களுடைய கோரிக்கையாக உள்ளது என்று கூறினார்.

உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கு மாநில அரசுக்கு உரிமை இருப்பது போலவே மாநிலத்தின் ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் அமைப்புச் சட்டம் எல்லோருக்குமான, சமமான சட்டத்தை கொடுத்து இருக்கிறது. யாராக இருந்தாலும் அவர்களின் வரம்புக்குள் இருக்கும் அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். சில நேரங்களில் நீதித்துறையோ அல்லது அதிகாரத்தில் இருக்கக் கூடிய நிர்வாக தரப்போ, தங்களுடைய அதிகாரத்தை ஓவர் ரீச் செய்கிறார்கள். 

மாநிலத்தின் ஆளுநர், துணை குடியரசு தலைவரை பார்ப்பதாக இருக்கட்டும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக இருக்கட்டும் அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள், முடிவு செய்து கொள்வார்கள் என கூறினார்.

மொழிப்போருக்கு என்ன அவசியம் வந்தது? யாராவது மொழியை கற்றுக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்? பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு, மத்திய அரசின் கல்விக் கொள்கையில் எந்த மொழியும் கட்டாயம் இல்லை என்று தான் கூறுகிறது. தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளில் படிக்கக் கூடிய குழந்தைகள் படிக்கக் கூடிய ஒரு வாய்ப்பை கொடுக்கும் அரசு, ஏழை அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஏன் அந்த வாய்ப்பை கொடுக்கவில்லை என்று தான் கேட்கிறோம் என்று கூறினார்.

கொங்கு மண்டலத்திற்கு தென் மண்டலத்தை சேர்ந்த மாநில தலைவரின் பங்கு எவ்வளவாக இருக்கும் என்ற கேள்விக்கு,

ஒரு அரசியல் கட்சி ஒருவருக்குமான அரசியல் கட்சி, அதுவும் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக கட்சி, இந்தியாவில் ஆளுநர் கட்சியாக இருக்கக் கூடிய தேசியக் கட்சி, அதனால் எங்களுடைய தலைவர் எந்த மண்டலத்தில் இருந்து வந்தாலும், ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிக்கு நாங்கள் எப்படி பங்காற்றுவோம் என்பதை மட்டும் தான் பார்க்கிறோம். புதிய தலைமுறைக்கு தகுந்த ஒத்துழைப்பை கொடுத்து, எங்களுடைய அனைவரின் இலக்காக இருக்கக் கூடிய 2026 - ல் தி.மு.க அரசை அகற்ற வேண்டும் என்பதற்கான வேலைகளை செய்வோம். இதை மண்டலத்தை வைத்து எதுவும் பிரித்து பார்க்க தேவையில்லை.

கூட்டணி குறித்த கேள்விக்கு,

இன்னும் ஏழு எட்டு மாதங்கள் இருக்கிறது பொறுத்து இருந்து பாருங்கள் யாரெல்லாம் வந்து எங்களுடன் இணைவார்கள் என்று, வெற்றி கூட்டணியாக இருக்கப் போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான். எங்கு சென்றாலும் அடுத்தது உங்கள் ஆட்சி தான் என்று கூறும் அளவுக்கு இருக்கிறது. யாரெல்லாம் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களெல்லாம் எங்கள் பக்கம் வந்து விடுவார்கள் என்று கூறினார்.

நாம் தமிழர் காரர்கள், நடிகர் டைரக்டர், அதனால் வசனங்கள் நல்லா சொல்லுவார்கள். நாங்களும் அந்த வசனங்களை எல்லாம் நல்லா ரசிப்போம் என கூறினார்.

அதிக இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க வை சார்ந்தவர் இருப்பாரா என்ற கேள்விக்கு,

இந்த முறை எங்களுக்கு அதிகமான பி.ஜே.பி உறுப்பினர்கள், வரலாற்றில் இல்லாத அளவுக்கு 2026 இல் உள்ளே நுழையப் போகிறார்கள். எத்தனை இடங்கள் கேட்க போகிறோம் என்பதையெல்லாம் பொறுத்து இருந்து பாருங்கள் என கூறினார். கடந்த முறை ஜெயித்ததை போலவே, கோவையில் பத்துக்கு, பத்து தேசிய ஜனநாயக கூட்டணி ஜெயிக்கும் என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe