காந்திபுரத்தில் பீர் பாட்டிலுடன் அடாவடி வாகன பயணம்- கைது செய்த காவல்துறை...

published 1 week ago

காந்திபுரத்தில் பீர் பாட்டிலுடன் அடாவடி வாகன பயணம்- கைது செய்த காவல்துறை...

கோவை: கோவையில் இருசக்கர வாகனத்தில் கையில் பீர் பாட்டிலுடன் ரகளை ஈடுபட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

கோவை, காந்திபுரம் 100 அடி சாலையில் இருந்து நவஇந்தியா நோக்கி செல்லும் மேம்பாலத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பீர் பாட்டில்களுடன் சென்றனர். 

அவர்கள் எதிரே வாகனங்களில் வந்தவர்களை மிரட்டியபடி அச்சுறுத்தும் வகையிலும் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை அறிந்த காட்டூர் காவல் துறையினர் தீவிர தேர்தல் வேட்டை நடத்தினர். 

மேம்பாலத்தில் ரகளையில் ஈடுபட்ட ராஜ்குமார், சுசீந்திரன் மற்றும் கௌதம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/r/16GrV9YGoQ/

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe