கோவை மாநகரில் சிறப்பு எஸ்ஐக்கள் 9 பேர் எஸ்ஐயாக பதவி உயர்வு- 12 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம்…

published 1 day ago

கோவை மாநகரில் சிறப்பு எஸ்ஐக்கள் 9 பேர் எஸ்ஐயாக பதவி உயர்வு-  12 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம்…

கோவை:  கோவை மாநகரில் சிறப்பு எஸ்ஐக்கள் 9 பேர் எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 12 எஸ்ஐக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

கோவை மாநகரில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த 9 பேர் எஸ்ஐயாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணிபுரிந்து வந்த சுரேஷ்பாபு, சிறப்பு நுண்ணறிவு பிரிவு எஸ்ஐயாகவும், போத்தனூர் போலீஸ் நிலையம் சிறப்பு எஸ்ஐக்கள் பார்த்திபன் ரத்தினபுரிக்கும், ராமர் ராமநாதபுரத்திற்கும், வெரைட்டி ஹால் போலீஸ் நிலையம் சிறப்பு எஸ்ஐக்கள் சுப்பிரமணி வடவள்ளிக்கும், ராதாகிருஷ்ணன் போத்தனூருக்கும், உக்கடம் போலீஸ் நிலையம் சிறப்பு எஸ்ஐக்கள் முருகேசன் கவுண்டம்பாளையத்திற்கும், கஜேந்திரன் சுந்தராபுரத்திற்கும், 

கரும்புக்கடை போலீஸ் நிலைய சிறப்பு எஸ்ஐ ஜோசப் அதே போலீஸ் நிலையத்திலும், ஆர்எஸ் புரம் போலீஸ் நிலையம் சிறப்பு எஸ்ஐ சந்திரசேகரன் துடியலூர் போலீஸ் நிலையத்திற்கும் எஸ்ஐயாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 12 எஸ்ஐக்கள் மாநகரில் பல்வேறு போலீஸ் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe