தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு- இருவர் கைது...

published 1 day ago

தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு- இருவர் கைது...

கோவை: கோவை மாநகர் வெரைட்டி ஹால் ரோடு  பொன்னையராஜபுரம் பழனிச்சாமி காலனி , இடையர் வீதி ஆகிய  பகுதிகளில் ரோட்டில் நடந்து சென்ற 2 வாலிபர்களிடம்  இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

செல்போன்களை பறித்துச் சென்ற நபர்களை பிடிக்க கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் 
தனிப்படை அமைக்கப்பட்டது.

இதில் உக்கடம் பகுதியில் வெரைட்டி ஹால் காவல் ஆய்வாளர் மீனாம்பிகை மற்றும் காவல் துறையினர் நேற்று இரவு வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில்  வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது அந்த வழியாக  இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் காவல்துறையினரை கண்டு நிற்காமல் வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் பின் தொடர்ந்து விரட்டி சென்றனர்.

 சி.எம்.சி காலனி காலனி பகுதியில் சென்ற போது அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை கீழே போட்டு விட்டு  காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து தப்பிக்க முயன்றனர்.  அவர்களை மடக்கிப் பிடித்த.  காவல் துறையினர் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், செல்வபுரம் என்.எஸ்.கே பகுதியைச் சேர்ந்த யுவராஜா பூபதி (30)  மற்றும் செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட் பகுதியைச் சார்ந்த சதாம் உசேன் (25) என்பது தெரியவந்தது.
 

கூலி வேலை பார்த்து வரும் அவர்கள உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம் இல்லாத போது ஒயின் ஷாப் பகுதியில் போவோர் வருவோர்களை மிரட்டி பணம் பறித்து அந்த பணத்தில் மது குடித்து உல்லாசமாக இருந்து வந்தது தெரிய வந்தது.

வேலை இல்லாத நாட்களில்  இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்வோர்களிடம் செல்போன்களை பறித்து சென்று அதனை கிடைக்கும் விலைக்கு  விற்பனை செய்து அதில் வரும் பணத்தில் மது அருந்துவோம் என்றும் காவல் துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe