முன்னாள் ராணுவ வீரர்களை மோசடி செய்து ஏமாற்றிய நிதி நிறுவனங்கள்- கோவையில் புகார்...

published 1 day ago

முன்னாள் ராணுவ வீரர்களை மோசடி செய்து ஏமாற்றிய நிதி நிறுவனங்கள்- கோவையில் புகார்...

கோவை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயங்கி வந்த பல தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று விளம்பரம் செய்திருந்தது. 

அதனை நம்பி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் உட்பட பல்வேறு பொதுமக்கள் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு முதல் அந்த நிதி நிறுவனங்களில் இருந்து முதலீட்டுத் தொகையும், லாப தொகையும் கிடைக்கப் பெறாத நிலையில் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தனர்.

அன்றிலிருந்து பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாவட்ட மற்றும் மாநகர காவல் நிலையங்களில் புகார் அளித்து வருகின்றனர். 
அதன் தொடர்ச்சியாக இன்றும் கோவையை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலக பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இது குறித்து பேட்டியளித்த தேசிய ஓய்வு பெற்ற ராணுவ சங்கத்தின் தலைவர் சுரேஷ்பாபு, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாவட்டமாக புகார்கள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஏமாற்றிய சில நபர்கள் கைது செய்யப்பட்டனர். இருந்த போதும் பலரும் கைது செய்யப்படாமல் இருப்பதாக தெரிவித்தார்.

இது குறித்து முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் அளிக்கவில்லை என தெரிவித்த அவர் ஈரோடு டிஎஸ்பி அந்த நிதி நிறுவனத்தினரை அழைத்து வட்டமேசை மாநாடு நடத்தி, புகாரை வாபஸ் பெறுமாறு தங்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டதில் ஏறத்தாள 60% பேர் முன்னாள் ராணுவ வீரர்கள் தான் என கூறிய அவர் முன்னாள் ராணுவ வீரர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் முதலமைச்சர் வாய் திறப்பதில்லை எனவும் இந்த முதலமைச்சர் ராணுவ வீரர்களுக்கான முதலமைச்சர் அல்ல மக்களுக்கான முதலமைச்சர் என்ற தகுதியும் இவருக்கு இல்லை என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe