கோவை வழியாக செல்லும் கொச்சி ரயில் ரத்து

published 2 years ago

கோவை வழியாக  செல்லும் கொச்சி ரயில் ரத்து

கோவை: கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும்
வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
 

தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே
கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப்
பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
 

இதனால் கொச்சி - கோா்பா வாராந்திர விரைவு ரயில் (எண்: 22648) நாளை (1-ந்
தேதி) மற்றும் 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. கோா்பா - கொச்சுவேலி
வாராந்திர விரைவு ரயில் ( எண்: 22647) செப்டம்பா் 3 மற்றும் 7-ந் தேதி
ரத்து செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe