ரத்தினம் கல்லூரி விழாவில் பேச்சுலர்  நடிகை... தனுஷ் உடன் நடிக்கனுமாம்..!

published 2 years ago

ரத்தினம் கல்லூரி விழாவில் பேச்சுலர்  நடிகை... தனுஷ் உடன் நடிக்கனுமாம்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை ரத்தினம் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி தனக்கு நடிகர் தனுஷ் உடன் நடிக்க ஆசை இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பு மற்றும் ஆடை வடிவமைப்பு ஃபேஷன் துறை சார்பில் ஃஎப் சேரிஸ் ஃபெஸ்டிவல் நடைபெற்றது.

இதில் குறும்படப் போட்டி, ஃபேஷன் ஷோ போட்டோகிராபி, டிரீம் கேட்சர் மேக்கிங், மெஹந்தி, ட்ராயிங் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி மானவர்களால் அரங்கேறிய ஆடை அலங்கார அணிவகுப்பில் லண்டன்,பாரிஸ் போன்ற நகரங்களில் நடப்பது போன்ற அரங்க அமைப்புடன் பல்வேறு நவ நாகரீக உடைகளுடன் மாணவ மாணவியர் அணிவகுப்பு நடத்தியது காண்போர் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பேச்சுலர் பட நடிகை திவ்ய பாரதி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கல்லூரி மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறைகளில் முயற்சிகளை முன்னெடுத்து பல்வேறு சாதனைகளை மேற்கொள்ள வேண்டும். எனக்கு நடிகர் தனுஷ் உடன் நடிக்க மிகவும் ஆசை உள்ளது. அதுமட்டுமல்லாமல் முக்கிய பிரபல நடிகர்களுடன் நடிக்க ஆசைப்படுகிறேன்." என்றார் 

oDk_8XvM7ZI

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe