செயற்கை வைரங்கள் விற்பனையகம் கோவையில் துவக்கம்

published 2 years ago

செயற்கை வைரங்கள் விற்பனையகம் கோவையில் துவக்கம்

கோவை:செயற்கை வைரங்களை விற்பனை செய்யும் வொண்டர் டைமண்ட் நிறுவனத்தின் 7வது கிளை கோவையில் எஸ்.வி.டி ஸ்ரீ வாசவி தங்க நகை மாளிகையில் துவங்கப்பட்டுள்ளது. 

இயற்கைக்கு சேதம் விளைவிக்காத வகையில் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரங்களை தயாரித்து அவற்றை தென்னிந்தியாவில் மிகப்பெரிய அளவில் எடுத்துச் சென்று கொண்டிருக்கக்கூடிய நிறுவனமான வொண்டர் டைமண்ட்  நிறுவனம் உள்ளது. 

இந்த நிறுவனம் தனது ஏழாவது கிளையை பெரிய கடை வீதியில் உள்ள எஸ்.வி.டிஸ்ரீ வாசவி தங்க நகை மாளிகையில் துவங்கியுள்ளது. 

வொண்டர்டைமண்ட் பிராண்டினுடைய  தயாரிப்புகள் அனைத்துமே100% வைர நகைகள் எனவும், ஒரு வைர நகைக்கு உரிய அத்தனை குணாதிசயங்களும் இந்த நகைகளில் அப்படியே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த புது கிளையை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி நட்சத்திரம்பவித்ரா லட்சுமி கோயம்புத்தூர் நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமன்,வொண்டர் டைமண்டின் நிறுவனர் ஐஸ்வர்யா குப்தா மற்றும் பலர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.   

இது குறித்து  நிறுவனத்தார் கூறுகையில், "இந்த வொண்டர் டைமண்ட் வைர நகைகளும் தரத்திலும் குணத்திலும் 100 சதவீதம்  இயற்கையான வைரம் போலவே இருக்கும் என்பதாலும், அனைவராலும் வாங்கக்கூடிய விலையில் கிடைப்பதாலும் இந்த நகைகளுக்கு நல்ல வரவேற்பு நாடு முழுவதும் இருந்து வருகிறது. வைர நகைகளின் விலையில் மூன்றில் ஒரு பங்கு விலையில் இந்த வைரத்தை வாங்கிவிடலாம்." என்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe