பி.எஸ்.ஜி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

published 2 years ago

பி.எஸ்.ஜி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வானுவம்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்வர்தன். இவரது மகள் நந்தினி(22). கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மாணவராக நான்காம் ஆண்டு பயின்று வருகிறார்.

கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வரும் நந்தினி இன்று காலை 11.30 மணியளவில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், "அறுவை சிகிச்சை செய்யும்  கத்தியை பயன்படுத்திக் கொண்டு மணிகட்டு நரம்புகளை அறுத்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மாணவியின் மரணம் குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் விமானம் மூலம் மாணவியின் பெற்றோர்கள் கோவை வருகின்றனர்.

அவர்கள் வந்த பிறகு மாணவியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது" என்றனர்.

தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்ற சூழலில் போலீசார் இது குறித்து விசாரணை நடத்துகின்றனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe