தனியார் பயிற்சி பள்ளியிடம் உள்ள அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர கோரிக்கை

published 2 years ago

தனியார் பயிற்சி பள்ளியிடம் உள்ள அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர கோரிக்கை

கோவை: தனியார் செவிலியர் பயிற்சி பள்ளியிடம் உள்ள ஏழை மாணவியின் அசல் கல்வி சான்றிதழ்களை பெற்றுத்தரக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியை அடுத்த கோட்டூரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற மாணவி அதே பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் என்ற செவிலியர் பயிற்சி பள்ளியில் படித்து வந்தார். இலவசமாக பயிற்சி வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவியை படிக்க வைப்பதாகக் கூறி அந்த நிறுவனம், மூன்று மாதம் விடுதியில் தங்கி பயிற்சி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும்,  மாணவியை தனியார் மருத்துவமனையில் 24 மணி நேரமும் பணியில் இருக்க நிர்பந்தித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி தான் படிப்பை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார். 

இதற்கு  மறுப்பு தெரிவித்த செவிலியர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர், கல்வியாண்டின் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தாமல் மாணவியின் அசல் கல்வி சான்றிதழை தரமுடியாது என்று தெரிவித்து அலைக்கழித்துள்ளனர். எனவே மாணவியின் அசல் சான்றிதழ்களை பெற்றுத்தர வேண்டும். 

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe