முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 9 மணி நேர ரெய்டு நிறைவு

published 2 years ago

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் 9 மணி  நேர ரெய்டு  நிறைவு

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய நபர்களின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூன்றாவது முறையாக ரெய்டு நடத்தியுள்ளனர்.

எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் அரசுக்கு ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் புகார் எழுந்தது. அதனடிப்படையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதியும், ஜூலை மாதம் 10ம் தேதியும் ரெய்டு நடத்தப்பட்டன.

இதனிடையே லஞ்ச லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் இன்று மூன்றாவது முறையாக ரெய்டு நடத்தியுள்ளனர். அதன்படி கோவையில் உள்ள வேலுமணி வீடு உள்பட 9 இடங்கள் மற்றும் சென்னை, திருச்சி உள்ளிட்ட 26 இடங்களில் எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 26 இடங்களில் ரெய்டு  நடைபெற்றது.

இதனிடையே ரெய்டு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதிமுக எம்.எல்.ஏ.,க்கள்  தாமோதரன், அம்மன் அர்ஜுனன், பி ஆர் ஜி அருண்குமார், கே ஆர் ஜெயராமன், அமுல் கந்தசாமி, விபி கந்தசாமி, ஏகே செல்வராஜ் ஆகிய 7 எம்.எல்.ஏ.,க்களும் வந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் வந்தனர். ஆரம்பத்தில் இருந்தே கூட்டம் கூடுவதை போலீசார் தடுத்து வந்தனர். ஒருகட்டத்தில் அங்கிருந்த அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி கைது செய்தனர்

காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த  ரெய்டு மாலை 4 மணி வரை சுமார் 9 மணி நேரமாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe