திமுக-பா.ஜ.க.,வினர் இடையே போஸ்டர் சண்டை..!

published 2 years ago

திமுக-பா.ஜ.க.,வினர் இடையே போஸ்டர் சண்டை..!

கோவை: கரூரில் மின்சாரத்துறை அமைச்சரை கேலி செய்து போஸ்டர் பாஜக.,வினர் போஸ்டர் ஒட்டியதன் எதிரொலியாக, கோவையில் பாஜக.,வை  கண்டித்து திமுக.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். 

கரூர் மாவட்டத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கேலி செய்யும் விதமாக பாஜகவினர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். அதில் "திருடர் குல திலகமே ஊழலின் மறு உருவமே அணிலுக்கு அடிச்ச ஜாக்பாட் 5,000 கோடிக்கு அதிபதியாக்கிய BGR ஊழல்" என்ற வாசகத்தை எழுதினர்.

மேலும், தராசுத் தட்டில் ஒரு பக்கம்  பணக்கட்டுகளும் மறுபக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமர்ந்திருப்பது போலும் அமைச்சர் செந்தில் பாலாஜி பணத்தை விட பலமானவர் என்பதைப் போல் தராசுத் தட்டு அமைச்சிருக்கும் பக்கத்தில் சாய்ந்திருப்பது போன்று சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டி இருந்தனர்.

இந்நிலையில் கோவை கிழக்கு மாவட்ட திமுகவினர் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பாஜக வை மறைமுகமாக விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்களில், "நோட்டா கிட்ட வச்சுக்கோ.... எங்க ஏட்டா கிட்ட வேண்டாம்..." என்ற வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

இந்த போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe