கோவையில் செப்டம்பர் 18-ம் தேதி 37-வது மெகா தடுப்பூசி முகாம்

published 2 years ago

கோவையில் செப்டம்பர் 18-ம் தேதி 37-வது மெகா தடுப்பூசி முகாம்

 

கோவை: 37-வது கோவிட்-19 மெகா தடுப்பூசி முகாம் செப்டம்பர் 18-ம் தேதி கோவை மாவட்டம் முழுவதும் 1,530 மையங்களில் நடைபெறவுள்ளது.

சுகாதாரத் துறை தரவுகளின்படி, இன்று வரை மாவட்டத்தில் மொத்தம் 29,16,812 18-வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 26,83,800 பேர் இரண்டாவது டோஸும் பெற்றுள்ளனர்.

மேலும் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில், 1,42,264 பேர் முதல் டோஸையும், 1,15,233 பேர் இரண்டாவது டோஸையும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட 90,666 குழந்தைகள் முதல் டோஸையும், 66729 பேர் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 82,061 பேருக்கும், 19 முதல் 59 வயதுக்குட்பட்ட 1,67,099 பேருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அருகிலுள்ள தடுப்பூசி மையங்கள் பற்றிய விவரங்களை coimbatore.nic.in என்ற இணையதளம் மூலம் அறியலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe