'இன்ஸ்டன்ட்-பாட்' பாலடை பாயசம்

published 2 years ago

'இன்ஸ்டன்ட்-பாட்' பாலடை பாயசம்

'இன்ஸ்டன்ட்-பாட்' என்று சொல்லப்படும் குக்கரில் செய்யப்படும் பாலடை பாயசத்திற்கான செய்முறை இங்கே...!

பாரம்பரியமாகப் பாலடை பாயசம் வீட்டில் தயாரிக்க மிகவும் கடினமான இனிப்புகளில் ஒன்றாகும். பாயசத்திற்கான பாலைத் தொடர்ந்து மணிக்கணக்கில் கிளறிக் கொதிக்க வைக்க வேண்டும். ஆனால் இனி கவலை வேண்டாம். சுலபமாகக் குக்கரில் செய்யக்கூடிய எளிதான செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள்:

  • 1 லிட்டர் முழு கிரீம் பால்
  • 1/2 கப் தண்ணீர்
  • 1/3 கப் சர்க்கரை
  • 1/3 கப் உலர்ந்த பாலடை
  • 200 கிராம் குறுக்கப்பட்ட பால்
  • உப்பு 1 சிட்டிகை
  • 1/2 தேக்கரண்டி நெய்
  • 10 முந்திரி, பாதியாக வகுந்தது

(குறிப்பு: இந்த பாயசத்தைத் தயாரிப்பதற்கு முழு கிரீம் / கொழுப்பு பால் சிறந்தது. பாலில் உள்ள கொழுப்புச் சத்து பாயசத்தைச் செழுமையாகவும், கிரீமியாகவும் மாற்றுகிறது. எனவே இந்த செய்முறையைச் செய்யக் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை பயன்படுத்த வேண்டாம்.)

செய்முறை:

  • முதலில் பாலை குக்கரில் (குக்கருக்குப் பதில் அடி கனமான பாத்திரங்களையும் பயன்படுத்தலாம்) சேர்க்கவும்.
  • அதில் சுமார் 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும். கொதிக்கும் போது பால் அடி பிடிக்காமல் இருக்கத் தண்ணீர் உதவும்.
  • அது சிறிது கொதித்த பின் சுமார் 1/3 கப் சர்க்கரையைச் சேர்க்கவும்.
  • கரண்டியைப் பயன்படுத்தி, எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவும்.

(குறிப்பு: பால் சார்ந்த உணவுகளைத் தயாரிக்கும் போது மரக் கரண்டியைப் பயன்படுத்த வேண்டாம். மரக் கரண்டியில் இருக்கும் எஞ்சிய உணவுத் துகள்கள், சமைக்கும் போது பாலை திரிய வைக்க வாய்ப்புள்ளது. எனவே பால் சார்ந்த உணவுகளைத் தயாரிக்கும் போது எப்போதும் உலோக கரண்டியைப் பயன்படுத்துங்கள்.)

  • கலந்த பிறகு, உடனடியாக குக்கரை மூடியிட்டு மூடி குக்கரின் வெய்ட்டைப் போடவும்.
  • இதனை 40 நிமிடங்கள் கொதிக்கவிட்டு பின் குக்கரை அணைக்கவும்.

பால் கொதிப்பதற்குள் நாம் பாலடையைத் தயார் கொள்ளலாம். கடைகளில் கிடைக்கும் எந்த ரெடிமேட் பிராண்டுகளும் இந்த செய்முறைக்குப் பயன்படுத்தலாம்.

  • ஒரு கிண்ணத்தில் 1/3 கப் பாலாடையைச் சேர்க்கவும். பாலடையை ஒரு முறை தண்ணீரில் கழுவவும். கழுவிய பின், பாலடையை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

(குறிப்பு: வெந்நீரைப் பயன்படுத்தினால் பாலாடை கரைய வாய்ப்புள்ளது என்பதாலும் அது கொதிக்கும் பொழுதே நன்றாக வெந்துவிடும் என்பதாலும் நாம் பாலாடையைக் குளிர்ந்த நீரில் ஊறவைக்கலாம்.)

  • 30 நிமிடங்களுக்குப் பிறகு பாலாடை நன்றாக ஊறியிருக்கும். தண்ணீரை அது உறிந்துகொள்ளும் என்பதால் அதன் அளவு சற்று அதிகரித்திருக்கும். அது ஊறியது போக மீதமுள்ள  தண்ணீரை வடித்து அதைத் தனியாக வைக்கவும்.
  • 40 நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து அதில் ஆவி அடங்கும் வரை வைத்திருக்கவும்.
  • ஆவி அடங்கிய பிறகு, மூடியைத் திறந்து நன்றாகக் கலக்கவும்.
  • பின்பு பாலடையைச்சேர்க்கவும்.
  • ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
  • குக்கரை மூடியிட்டு மூடி குக்கரின் வெய்ட்டைப் போடவும்.
  • இதனை 2 நிமிடங்கள் சமைத்து பின்பு குக்கரை அணைத்து அதில் ஆவி அடங்கும் வரை வைத்திருக்கவும்.
  • ஆவி அடங்கிய பிறகு, மூடியைத் திறந்து நன்றாகக் கலக்கவும்.
  • குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக் குறுக்கப்பட்ட பாலைச் சேர்க்கவும்.

(குறிப்பு: குறுக்கப்பட்ட பால் சேர்க்காமலும் இந்த பாயசத்தைச் செய்யலாம். இதைச் சேர்ப்பதால் பாயசத்தின் மணமும் ருசியும் கூடுவதோடு பாயசம் கெட்டியாகவும் இருக்கும்.)

  • இப்போது முந்திரியை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
  • அரை தேக்கரண்டி நெய் சேர்க்கவும்.
  • பாயசத்தைக் குறைந்தது 6 மணிநேரம் குளிரவைத்துப் பரிமாறவும்.

சூப்பரான சுவையான பாயசத்தை ருசித்து மகிழுங்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe