ஆலு பரோட்டா செய்யும் முறை..

published 2 years ago

ஆலு பரோட்டா செய்யும் முறை..

 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்த உணவு காலை ப்ரேக்ஃபஸ்ட் மற்றும் இரவு டின்னருக்கும் ஏற்றது.  பஞ்சாபி குடும்பங்களில் பராத்தாக்களை நிறைய நெய் மற்றும் வெண்ணெய் இட்டுச் செய்வார்கள். அதிக நெய்யை விரும்பாதவர்கள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இந்த உணவு காலை ப்ரேக்ஃபஸ்ட் மற்றும் இரவு டின்னருக்கும் ஏற்றது.  பஞ்சாபி குடும்பங்களில் பராத்தாக்களை நிறைய நெய் மற்றும் வெண்ணெய் இட்டுச் செய்வார்கள். அதிக நெய்யை விரும்பாதவர்கள் ஆலு பராத்தாவை எண்ணெய் ஊற்றியும் செய்யலாம்.  

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்க் செய்ய:

  • உருளைக்கிழங்கு- 4 (நடுத்தர அளவிலானது)
  • பச்சை மிளகாய்: 1 அல்லது 2 (பொடியாக நறுக்கியது)
  • கரம் மசாலா- 1/4 தேக்கரண்டி
  • காஷ்மீரி சிகப்பு மிளகாய்த் தூள்- 1/4 தேக்கரண்டி
  • உலர் மாம்பழ தூள்: 1/2 தேக்கரண்டி
  • உப்பு- தேவையான அளவு

மாவு செய்ய:

  • முழு கோதுமை மாவு- 2 கப்
  • எண்ணெய் அல்லது நெய்- 1 தேக்கரண்டி
  • தண்ணீர்- 1/2 கப்
  • உப்பு- தேவையான அளவு

உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்க் செய்முறை:

  • முதலில் குக்கரில் 4 நடுத்தர அளவிலான உருளைக்கிழங்குகளை வேகவைக்கவும். மிதமான தீயில், உருளைக்கிழங்கை 3 முதல் 4 விசில் வரை வேகவைக்க வேண்டும். 
  • குக்கரை அணைத்து ஆவி அடங்கிய பின் மூடியை அகற்றி தண்ணீரை வடிகட்டவும். 
  • உருளைக்கிழங்கு ஆறிய பிறகு அவற்றை உரிக்கவும்.
  • தோலுரித்த உருளைக்கிழங்கைச் சிறு துண்டுகளாக நறுக்கி மாஷர் அல்லது கரண்டியால் மசிக்கவும். மசித்த உருளைக்கிழங்கில் கட்டிகள், துகள்கள் அல்லது துண்டுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • இப்போது மேலே குறிப்பிட்டுள்ள மசாலாப் பொருட்களைச் சேர்த்துப் பிசையவும்.
  • தயார் செய்த ஆலூ ஸ்டப்பிங்கை ஓரமாக வைக்கவும்.

மாவு செய்முறை:

  • ஒரு தனி கிண்ணத்தில் முழு கோதுமை மாவை எடுத்து அதில் எண்ணெய் அல்லது நெய், தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றிப் பிசையவும்.
  • மாவை 8 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையாகும் வரை பிசையவும். 
  • மாவை 20 முதல் 30 நிமிடங்கள் வரை மூடி வைக்கவும்.
  • ஊறிய மாவைக் கொண்டு நாம் இப்போது ஆலு பராத்தாவை செய்யப் போகிறோம். 

'டபுள் டிஸ்க்' முறை

  • மாவிலிருந்து இரண்டு சிறிய உருண்டைகளாகக் கிள்ளி அவற்றை இரு வேறு சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
  • சப்பாத்தி போல் தேய்த்த ஒரு வட்டில் மையப் பகுதியில் உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்கை வைக்கவும். ஓரம் வரை ஸ்டப்பிங்கை வைக்க வேண்டாம்.
  • மெதுவாக இரண்டாவது வட்டத்தை மேலே வைத்து இரண்டையும் சேர்த்து ஸ்டப்பிங் வெளியே வராத படி தேய்க்கவும்.

'டம்ப்லிங்க்' முறை

  • மாவிலிருந்து ஒரு சிறிய உருண்டையைக் கிள்ளி அதைச் சப்பாத்தி போல் தேய்க்கவும்.
  • அதன் மையப் பகுதியில் உருளைக்கிழங்கு ஸ்டப்பிங்கை வைக்கவும். 
  • அதனைக் கொழுக்கட்டை செய்வது போல் சேர்த்து மூடவும். 
  • மூடிய பின் ஸ்டப்பிங் வெளியே வராத படி தேய்க்கவும்.
  • (குறிப்பு: நாம் வழக்கமாகச் செய்யும் சப்பாத்திகளை விட ஆலு பராத்தாவைச் சிறிது தடிமனாகத் தேய்க்க வேண்டும். இல்லையேல் அதைச் சமைக்கும் போது அவை மிருதுவாக இருக்காது.)
  • தோசைக் கல்லைச் சூடாக்கி பராத்தாக்களை எண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்றாக வேகும் வரை இரு பக்கங்களும் திருப்பி சுட்டு எடுக்கவும். 

இப்போது சூடான பராத்தாக்களை தயிர் மற்றும் ஊறுகாயுடன் பரிமாறலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe