முன் வாசலில் கோயம்புத்தூர் பின் வாசலில் கோயம்பத்தூர்…! ரயில்வே நிர்வாகம் அலட்சியம்

published 2 years ago

முன் வாசலில் கோயம்புத்தூர் பின் வாசலில் கோயம்பத்தூர்…! ரயில்வே நிர்வாகம் அலட்சியம்

முன் வாசலில் கோயம்புத்தூர் பின் வாசலில் கோயம்பத்தூர்…! ரயில்வே நிர்வாகம் அலட்சியம்

கோவை: மத்திய அரசின் திட்டங்களில் இந்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் தமிழ் எழுத்தில் ரயில் நிலைய ஊர்களின் பெயர்ப்பலகைகளில் உள்ள பெயர்கள் கூட பிழையுடன் எழுதுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஆறு நடைமேடைகள் 20 இரும்பு பாதைகளைக் கொண்ட தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

கோயம்புத்தூரின் சிறப்பு வாய்ந்த இந்த ரயில் நிலையத்தின் பெயர் தமிழில் கோயம்பத்தூர் ரயில் நிலையம் என ரயில் நிலையத்தின் பின் பகுதியில் எழுதப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் முன்வாசலில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் என எழுதப்பட்டு உள்ள நிலையில் பின் வாசலில் கோயம்பத்தூர் எனத் தவறாகப் பெயர் பலகையில் எழுதப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னிந்தியாவின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் தமிழில் எழுதும்போது பிழையுடன் எழுதப்பட்டிருப்பது தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ரயில்வே துறை மக்கள் தொடர்பு அதிகாரியிடம் கேட்டபோது பின் வாசலில் கோயம்பத்தூர் என பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளது தொடர்பாக எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது விரைவில் இது சரி செய்யப்படும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe