10 ரூபாய் காயின் கொடுத்தால் பல விதப் பொருட்கள்: நாளையுடன் முடிகிறது கோவையின் எக்ஸ்க்லூசிவ் ஆஃபர்

published 2 years ago

10 ரூபாய் காயின் கொடுத்தால் பல விதப் பொருட்கள்: நாளையுடன் முடிகிறது கோவையின் எக்ஸ்க்லூசிவ் ஆஃபர்

 

கோவை: 10 ரூபாய் காயின்கள் கொடுத்து செல்போனுக்கான டெம்பர் க்ளாஸ், ஹெட்போன், டேட்டாக் கேபிள், பேன்சி பேக் கேஸ் ஆகியவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று கோவையில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள செல்போன் உதிரிப்பாக கடை அறிவித்துள்ள நிலையில் இந்த ஆஃபர் நாளையுடன் முடிவடைகிறது.

கோவை கிராஸ்கட் சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை அருகே 'மொபைல் பாய்ஸ்' என்ற பெயரில் செல்போன் ஆக்சசரீஸ் விற்பனையகம் துவக்கப்பட்டது. இந்தக் கடையில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் திறப்பு விழா சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ரூபாய் காயின்களைப் பலரும் வாங்கத் தயக்கப்படும் சூழலில், இந்தக் கடை நிர்வாகம் 10 ரூபாய் காயின்கள் கொண்டுவருபவர்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது.

அதன்படி, 10 ரூபாய் காயின் ஒன்று கொடுத்தால் மொபைலுக்கான டெம்பர் க்ளாஸ், 2 காயின்கள் கொடுத்தால் OTG கேபிள், 3 காயின்கள் கொடுத்தால் மூன்று மாத  வாரண்டியுடன் கூடிய ஹெட்போன், 4 காயின்கள் கொடுத்தால் டேட்டா கேபிள் ஆகியவற்றை கொடுத்து வருகின்றனர்.

பத்து ரூபாய்க் காயின்கள் 5 கொடுத்தால் 6டி டெம்பர் க்ளாஸ் வாங்கிக் கொள்ளலாம், 6 காயின்கள் கொடுத்தால் கார் சார்ஜர் அடாப்டர், 7 காயின்கள் கொடுத்தால் ரூ.300 மதிப்புள்ள செல்பி ஸ்டிக் வாங்கிக் கொள்ளலாம்.

8 காயின்கள் கொடுத்தால் பேன்சி பேக் கேஸ் (Phone Back case), 9 காயின்கள் கொடுத்தால் ப்ளிப் பவுச் (Flip Pouch),  10 காயின்கள் கொடுத்தால் ரூ.1500 மதிப்புள்ள ப்ளூடூத் ஹெட்போன் ( Neck band bluetooth Headphone) வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர அனைத்து உதிரிப் பாகங்களுக்கும் 50 சதவீத ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் இந்த ஆஃபர்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) இந்த ஆஃபர்கள் முடிகின்றன.

இதுகுறித்த விவரங்களுக்கு 9944110000, 9488111000, 8122211000 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe