மைல்கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவையன்ஸ்

published 2 years ago

மைல்கல்லுக்கு ஆயுத பூஜை கொண்டாடிய கோவையன்ஸ்

கோவை: கோவையில் தொலைவைக் காட்டும் மைல்கல்லுக்கு பொட்டு வைத்து பூஜை செய்து படையலிட்டு ஆயுதபூஜை கொண்டாடியுள்ளனர் கோவை மக்கள்.

குசும்புக்கு பஞ்சமில்லாத ஊர் நம்ம கோயம்புத்தூர். அதனாலேயே இங்கு கண்மூடித்தனமான மூட நம்பிக்கைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. "கருப்பன் குசும்புக்காரன், ரேபான் கண்ணாடி கேக்குறான்" என்று யாரவது கோவை மக்களை ஏமாற்ற நினைத்தால், தங்களது குசும்புத்தனமான பதிலைக் கூறி அந்த மூட நம்பிக்கையை மண்ணோடு மண்ணாக்கி விடுவார்கள்.

இந்த நிலையில், நமது கோவையில் மைல்கல்லுக்கு பூஜை செய்யப்பட்டு படையல் படைத்து வழிபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பூலுவபட்டியில் பழைய மைல்கல் சேதம் அடைந்ததால் அதை அகற்றிவிட்டு புதிய மைல்கல் வைக்கப்பட்டு இருந்தது.

சிறுவாணிக்கு 20 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள மைல்கல்லுக்கும், கேரள மாநிலம் முக்காளி என்ற இடத்திற்கு 45 கிலோ மீட்டருக்கு முன்பு வைக்கப்பட்ட கல்லுக்கும்  ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

அந்த மைல்கற்களுக்கு இருபுறமும் வாழைக்கன்று வைத்து, மாவிலையால் தோரணம் கட்டி, மாலையிட்டு, பொட்டு வைத்து படையல் படைத்து ஆயுத பூஜை கொண்டாடப்பட்டுள்ளது.

இது மைல்கற்களை கொண்டாடுவதாக அல்லாமல், தங்கள் ஊரை நேசிக்கும் மக்கள், அதன் பெயருக்கு செய்யும் கொண்டாட்டம் என்று பார்த்தால் கோவையன்ஸ் அழகு தான்.

என்னதான் இருந்தாலும் நம்ம ஊர விட்டுக்கொடுக்க முடியுமா.😛

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe