கிட்ஸ் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நேக்: வாழைக்காய் போண்டா

published 2 years ago

கிட்ஸ் விரும்பி சாப்பிடும் ஒரு ஈவ்னிங் ஸ்நேக்: வாழைக்காய் போண்டா

 

தேவையான பொருட்கள்:

வாழைக்காய்- 2

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 5

கரம் மசாலாத் தூள்- 1 தேக்கரண்டி

சீரகம்- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை- 10 இலை

கொத்தமல்லி- சிறிது

உப்பு- தேவையான அளவு

எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

வெங்காயத்தைத் தோல் உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வாழைக்காயைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

வாழைக்காய் வெந்ததும் எடுத்துத் தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.

தோல் உரித்த வாழைக்காயை காரட் துருவியால் ஒரு தட்டில் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய வாழைக்காய், நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு அதனுடன் கரம் மசாலாத் தூள், சீரகம், உப்பு சேர்த்து ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.

எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கலந்து வைத்திருக்கும் கலவையைச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பொரித்து எடுக்கவும்.

எளிதில் தயாரிக்கும் வாழைக்காய் போண்டா ரெடி. இதைத் தக்காளி சாஸுடன் பரிமாறலாம். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு மாலை நேரச் சிற்றுண்டி. 

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe