கோவை: மக்களிடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, சமூக நல்லிணக்க மனித சங்கிலி கோவையில் இன்று நடைபெற்றது. இதில் அனைத்து கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கோவையில் கடந்த மாதம் இரு பிரிவினர் இடையே மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், கோவையில் அமைதியை பேணிக்காக வலியுறுத்தி கோவை காந்திபுரம் பகுதியில் நஞ்சப்பா சாலை மற்றும் கிராஸ்கட்சாலை உள்ளிட்ட இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற்றது.
சி.பி.எம் மாவட்ட செயலாளர் பத்மநாபன் , தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆறுமுகம், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மனித சங்கிலியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு "அமைதியான கோவை அனைவருக்கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும்" என்ற கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து சி.பி.எம் கட்சியின் மாவட்ட செயலாளர் பத்மநாபன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 15 நாட்களாக இந்து அடிப்படைவாத அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ் அமைப்புகள் கோவையை பதற்றம் மிகுந்ததாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் ஜனநாயக, மத சார்பற்ற, இடதுசாரி அமைப்புகள் அம்பேத்காரிய, பெரியாரிய அமைப்புகளின் ஒன்றிணைந்து அமைதியான கோவை அனைவருக்கும் தேவை, அமைதியான தமிழகம் அனைவருக்கும் தேவை என்பதற்காக தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
இதன் மூலம் எல்லோரும் சமம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் என்று மனித சங்கிலி மூலமாக வேண்டுகோள் விடுக்கிறோம். மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இந்த மனிதசங்கிலியில் கலந்து கொண்டுள்ளனர்.
இதுகுறித்து மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியதாவது:
தமிழகத்தில் மதவெறியை வளர்த்து தமிழர்களை பிரித்து அரசியல் ஆதாயத்திற்காக பிரிவினைவாதத்தை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் அரசியலை எடுத்து ஜன நாயக அமைப்புகள் நடத்தும் மனித சங்கிலியில் பெருந்திரளாக மக்கள் பங்கெடுத்து தமிழகத்தில் இந்துத்துவ மதவெறி அரசியலுக்கு இடமில்லை என்று நிரூபித்துள்ளனர்.
மோடி அரசால கொண்டுவரப்படும் மதவெறி அரசியலை வேர்றறுக்கும் என்பதை இந்த மனிதசங்கிலி இந்தியாவிற்கு எடுத்துரைக்கிறது. கட்சி, சாதி, மதம் கடந்து இந்து துவ மதவெறி அரசியலுக்கு எதிராக கரம் கோர்த்து நிற்கிறோம். இதுதான் இந்த மண்ணின் அரசியல், மார்கிஸின் அரசியல் அம்பேத்கரின் அரசியல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் திராவிடர் கழகம்
இந்திய தேசிய காங்கிரஸ் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மனிதநேய மக்கள் கட்சி தமிழக வாழ்வுரிமை கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம் இந்திய தேசிய லீக் எஸ்.டி.பி.ஐ நாம் தமிழர் கட்சி சிபிஐ (எம்.எல்-விடுதலை) தமிழ்ப்புலிகள் கட்சி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் மிழக விடியல் கட்சி பீமாராவ் குடியரசு கட்சி
தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் திராவிடர் விடுதலை கழகம் திராவிடர் தமிழர் கட்சி சிஐடியூ ஏஐடியூசி எல்.எல்.எப் மக்கள் மன்றம் புலிப்படை தமிழ்நாடு இளைஞர் சங்கம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மக்கள் அதிகாரம் டிசம்பர் 3 இயக்கம் காஞ்சி மக்கள் மன்றம் இந்திய மாணவர் சங்கம்
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழ்நாடு மாணவர்கள் இளையோர் கூட்டமைப்பு தமிழ்நாடு சமத்துவ தையல் தொழிலாளர் நலச்சங்கம் தமிழ்நாடு படைப்பாளிகள் கூட்டமைப்பு இந்திய ஜவுஹித் ஜமாத் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகம் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டன.
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!