இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

published 2 years ago

இந்தி திணிப்புக்கு எதிராக கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்

இந்தி திணிப்பு திட்டத்தையும்,  ஒரே பொது நுழைத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி
கோவை மாநகர்  மாவட்ட  திமுக  இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக்   தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,

மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ப. பைந்தமிழ் பாரி,கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் கோட்டை அப்பாஸ், தளபதி இளங்கோ, கோவை மாநகர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி. ஜி. கோகுல் ஆகியோர் கலந்து கொண்டு இந்தி திணிப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe