கோவையில் 80 வியாபாரிகள் கைது..!

published 2 years ago

கோவையில் 80 வியாபாரிகள் கைது..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: தியாகி குமரன் மார்க்கெட்டில் கடைகளை ஒதுக்கக் கோரி சென்னை நோக்கி நடைபயண முயற்சி செய்த 15 பெண்கள் உட்பட 80 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தியாகி குமரன் மார்க்கெட்டில் இருந்த 88 கடைகளுக்கு அதன் பின்புறம் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. அதன் பின்பு தியாகி குமரன் மார்க்கெட் உள்ளே கட்டப்பட்ட கடைகள் பொது ஏலத்தில் விடப்பட்டது.

இதனால் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வியாபாரம் செய்து வந்த 88 கடைக்காரர்கள் தங்களுக்கு மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதனை வலியுறுத்தி இன்று  காலை 88 கடைகள் மீட்பு வாழ்வுரிமை போராட்ட'குழுவினர் அதன் தலைவர் உம்மர் அலி தலைமையில் தனது குடும்பத்தினருடன் கோவை அண்ணா சாலையில் இருந்து சென்னை நோக்கி நடை பயணம் செல்ல முயற்சி செய்தனர்.

பாதுகாப்புக்காக அங்கு வந்த போலீசார் தடையை மீறி நடை பயணம் செய்ய முயன்ற 15 பெண்கள் உட்பட 80 பேரை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe