இழப்பீடு கேட்டு பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

published 2 years ago

இழப்பீடு கேட்டு பாரதியார் பல்கலைக்கழகம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

கோவை: 1980ல் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு, அந்த நிலத்தில் மருதமலை சாலையிலுள்ள பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது எனவும், நிலம் கொடுத்தவர்களுக்கு அப்போதைய கணக்கின்படி செண்டிற்கு ரூ.1900 என நிர்ணயிக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது எனக் குறிப்புகள் கூறுகின்றன.

ஆனால் பல வருடங்கள் ஆகியும் நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு பணம் கொடுக்காததால், நிலம் கொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 2007ம் ஆண்டு வழக்கின் தீர்ப்பில் உடனடியாக விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணத்தை ஒப்படைக்குமாறு கூறப்பட்டது. செண்டிற்கு ரூ.3396 என நிர்ணயிக்கப்பட்டுத் தீர்ப்பு வெளியிடப்பட்டது. 

அதன்படி வட்டி தொகையாக ரூ.42 கோடி நிலம் கொடுத்த விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது. தீர்ப்பினை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. 35 வருடங்களுக்கு மேலாகியும், மூன்று தலைமுறைகள் கடந்தும் கூட அரசு இழப்பீடு பணத்தைக் கொடுக்கவில்லை, நிலம் கொடுத்தவர் 900 நபர்களுள் பலர் இறந்தும் விட்டனர் என்றும் போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறினர். இதுகுறித்து நடராஜன் எம்.பி கூறும்போது.

"தற்போதைய அரசுக்கு 600க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கையை மனுவாக அளித்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

இதனால் இன்று பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பு 150க்கும் மேற்பட்ட நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

உடனடியாக அவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை அரசு கொடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு உள்ளே நுழைந்து ஆடு, மாடுகளைக் கட்டி குடியேறுவோம்", என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் ஏ.டி.எஸ்.பி ராஜேந்திரன், பேரூர் டி.எஸ்.பி திருமால் மற்றும் கரூர் வட்டாட்சியர் சுஜாதா குமாரி , ஆர்.டி.ஓ நீல் அலெக்ஸ் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் வரும் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதையடுத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe