கோவையில் பட்டாசு விற்பனை மற்றும் இனிப்பு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு

published 2 years ago

கோவையில் பட்டாசு விற்பனை மற்றும் இனிப்பு நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்பாக ஆய்வு

கோவை: கோவையில் பட்டாசு தொழிற்சாலைகள், இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள் மற்றம் பட்டாசு விற்பனை நிலையங்களில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியமர்த்தப்பட்டிருப்பது தொடர்பாக மாவட்ட தடுப்பு படையினர்,

ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், சைல்டு லைன் அமைப்பு, தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர்களால் மொத்தம் 33 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இதுதவிர கலெக்டருக்கு வந்த புகாரின் அடிப்படையில் கோவை செட்டி வீதி பகுதியில் உள்ள மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் கடையில் ஆய்வு மேற்கொண்டதில் ஒரு வளரிளம் பருவத் தொழிலாளர் மீட்கப்பட்டு குழந்தை நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. பணிக்கு அமர்த்திய நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe