கோவையில் 2 இடங்களில் செல்போன் டவரை காணவில்லை

published 2 years ago

கோவையில் 2 இடங்களில் செல்போன் டவரை காணவில்லை

கோவை: இந்தியாவில் செயல்படும் பிரபல செல்போன் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை தனியார் கட்டிடங்கள் மற்றும் நிலங்களில் மாத வாடகை அடிப்படையில் அமைத்துள்ளனர்.

இதேபோல், சென்னையை சேர்ந்த தனியார் உள்கட்டமைப்பு நிறுவனம் மூலம்  செல்போன் டவர்கள் கோவையில் பல இடங்களில் அமைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஒரு செல்போன் நிறுவனம்  தனது செல்போன் சேவையை நிறுத்தி விட்டன.

அதன்பின்னர் அந்நிறுவனத்தின் உபயோகமற்ற நிலையில் இருந்த செல்போன் டவர், அதன் உதிரிபாகங்கள் பல இடங்களில் மாயமானதாக கூறப்படுகிறது. இத்தகவலின் பேரில், சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரி அர்ச்சுனன் (49), சரவணம்பட்டி - துடியலூர் ரோட்டில் தனியார் நிலத்தில் பொருத்தப்பட்டிருந்த செல்போன் டவர் மற்றும் சரவணம்பட்டி - சத்தி ரோட்டில் தனியார் கட்டிடத்தில் இருந்த செல்போன் டவர்களை ஆய்வு செய்ய சென்றார்.

அப்போது சுமார் ரூ.46.50 லட்சம் மதிப்பிலான செல்போன் டவர் மற்றும் அதன் உதிரிபாகங்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அர்ச்சுனன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், 2  இடங்களிலும், கடந்த 1999-ம் ஆண்டு செல்போன் டவர்கள் பொருத்தப்பட்டன. அவற்றை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து படிப்படியாக மர்ம நபர்கள் திருடி சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் டவர் மற்றும் உதிரிபாகங்களை திருடி சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe