சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக இலவச மருத்துவ முகாம்

published 2 years ago

சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக இலவச மருத்துவ முகாம்

கோவை: கோவையில் சமூக நீதி கூட்டமைப்பு சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

சமூகநீதி கூட்டமைப்பு சார்பாக மிலாது விழா மற்றும் , தீபாவளியை முன்னிட்டு இலவச  மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை  வின்சென்ட் ரோடு, கிரீன் கார்டனில் நடைபெற்றது.

சமூக நீதி கூட்டமைப்பின் மாநில தலைவர்  இராம.வெங்கடேஷ்  தலைமையில் நடைபெற்ற இதில், லயன்ஸ் . ஏ. அருள்தாஸ்   முன்னிலை வகித்தார்.

இதில் சமூக நீதிக்கே  முன்மாதிரி தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி உலக தலைவர்களெல்லாம் கூறிய தொகுப்பு மலரை வெளியிட்டு கண்காட்சியையும், இலவச மருத்துவ முகாமும் துவக்கை வைக்கப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில்  110 பேர் பயனடைந்தனர், 40 பேருக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாற்றுத்  திறனாளிகள், கைம்பெண்கள் , குழந்தைகள்  200 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe