கோவையில் பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா

published 2 years ago

கோவையில் பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா

 

கோவை: கோவை மாவட்டத்தில் முன்னோடி விவசாயிகள் பல்வேறு சிறப்புப் பண்புகளைக் கொண்ட பயிர் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார்கள். அவற்றுள் பல பயிர் ரகங்கள் நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளதாகவும், அதிக விளைச்சல் தருவதாகவும், வறட்சியைத் தாங்கி வளரும் தன்மை கொண்டதாகவும், மருத்துவ தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இத்தகைய பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் ரகங்கள் தாவர மரபியல் ஆராய்ச்சியாளர்களுக்குத் தேவையான புதிய பயிர் ரகங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

தமிழக அரசு இதனைக் கருத்தில்கொண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் இதற்கான சிறப்புக் கண்காட்சி நடத்திட அறிவுறுத்தி இருந்தது. அதன் அடிப்படையில் சிறந்த பண்புகளைக்கொண்ட பல்வேறு பாரம்பரியமிக்க உள்ளூர் பயிர் இரகங்களை கண்டறிந்து, ரக மேம்பாட்டுப் பகுதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் இதுகுறித்த கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை மாவட்ட வேளாண்துறை சார்பில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் 'பாரம்பரிய பயிர் ரகங்கள் வேளாண் திருவிழா' இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்கத்தின் இயக்குநர் முருகன் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் அஹமது தலைமை தாங்கினார்.

இதில் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இக்கண்காட்சியில் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், தொழில்நுட்ப வணிக காப்பகம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைகளின் மூலமும் இயற்கை வேளாண் வழி விதைகள், பாரம்பரிய சிறுதானிய உணவுகள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த வேளாண் திருவிழாவில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், அதிகாரிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.  நிகழ்வில் விவசாயிகளுக்குப் பாரம்பரிய ரகங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள், செங்காம்பு கறிவேப்பிலை நாற்று, பாரம்பரிய பயிர் ரகங்கள் குறித்த தொழில்நுட்ப கையேடு, மற்றும் பேனா அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பல வகை அரிய கருவிகள் மற்றும் பயிர்களின் புகைப்படத் தொகுப்பை நமது Photostory பக்கத்தில் இங்கே காணலாம்: https://newsclouds.in/news/1410/Kovai_traditional_crops_exhibition:_Photos

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe