தீபாவளியையொட்டி கோவையிலிருந்து நாளை முதல் 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

published 2 years ago

தீபாவளியையொட்டி கோவையிலிருந்து நாளை முதல் 240 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

கோவை: தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி கோவையில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்குத் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவார்கள்.

அவர்களுக்கு வசதியாக நாளை முதல் 23-ஆம் தேதி வரை கோவையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச்  சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மதுரைக்கு 100 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகளும், திருச்சிக்கு 50 பேருந்துகளும், சேலத்துக்கு 50 பேருந்துகளும் என மொத்தம் 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

போக்குவரத்து மற்றும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் பல்வேறு பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

வழக்கமாக, போக்குவரத்து நெரிசலைத் தடுக்கக் கொடிசியாவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த ஆண்டில் சிறப்பு பேருந்துகள் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையம் மற்றும் சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதில் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தேனி போன்ற தென்மாவட்டங்களுக்கும், சூலூர் பேருந்து நிலையத்திலிருந்து கரூர், திருச்சிக்கும், காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைக்கட்டி வழியாகச் செல்லும் பேருந்துகளும், மேட்டுப்பாளையம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம்  செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

இந்த பேருந்து நிலையங்களுக்குப் பொதுமக்கள் எளிதில் செல்வதற்காக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுமக்கள் பேருந்து நிலையங்களின் தகவல்களை எளிதாகத் தெரிந்து கொள்ளும் வகையில் பேருந்து நிலையங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்ப்பில் அறிவிப்பு பேனர்கள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe