கோவை அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

published 2 years ago

கோவை அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

 

கோவை: உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதம் 'பிங்டோபர்' என்று கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மாதம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்  நடைபெற்றது. இதனை மருத்துவமனை முதல்வர் நிர்மலா தொடக்கிவைத்தார்.

மார்பக புற்றுநோய் பாதிப்பைக் கண்டறிதல், அதன் அறிகுறிகள், சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம், கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

மருத்துவமனை வளாகத்திலே செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இதில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். மண்டலப் புற்றுநோய் மைய மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe