தென்காசியிலிருந்து பொள்ளாச்சி வந்த வாலிபரைத் தாக்கிய பெயிண்டர் கைது

published 2 years ago

தென்காசியிலிருந்து பொள்ளாச்சி வந்த வாலிபரைத் தாக்கிய பெயிண்டர் கைது

கோவை: தென்காசியைச் சேர்ந்தவர் சம்சுதீன் (வயது  38), ஓட்டுநர். சம்பவத்தன்று இவர் தனது மினி வேனில் தென்காசியிலிருந்து பொள்ளாச்சிக்கு ஆப்பிள் ஏற்றி வந்தார்.

ஆப்பிளைப் பொள்ளாச்சியில் இறக்கிவிட்டு ஊர் திரும்பினார். அப்போது பொள்ளாச்சி புது பேருந்து நிலையம் சென்று அங்குள்ள ஒரு பேக்கரிக்கு சென்றார். அங்கு நின்று இருந்த போது ஒருவர் வந்தார்.

அவர் சம்சுதீன் அருகில் வந்து அவரிடம் எங்கே செல்கிறாய் எனக் கேட்டார். அதற்கு அவர் தென்காசியிலிருந்து வந்ததாகவும் திரும்பி ஊருக்குச் செல்வதாகவும் கூறினார். அப்போது அந்த மர்ம நபர் எதற்காக இங்கே நிற்கிறாய், உடனே இங்கு இருந்து செல் என்றார்.

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த மர்ம நபர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த கல்லை எடுத்து தலையில் தாக்கினார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பலத்த காயம் அடைந்த சம்சுதீனை மீட்டுப் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து சம்சுதீன் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சம்சுதீனைத் தாக்கிய பாலக்காட்டைச் சேர்ந்த பெயிண்டர் ராபட் விஜயன் (45) என்பவரைக் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

இதையும் பார்க்கலாமே... கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe