தீபாவளி என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையான 'தீபாவளி' என்பதிலிருந்து வந்தது, அதாவது 'ஒளிரும் விளக்குகளின் வரிசைகள்' என்று பொருள். இந்தியா முழுவதும் உள்ள குடும்பங்கள் தங்கள் வீட்டுகளையும் கடைகளையும் சிறிய தீபங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, வெடி வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி கொண்டாடுவர்.
நாடு முழுவதும் மக்கள் தீபாவளி திருநாளை ஓரிரு வாரங்கள் முன்பிருந்தே தெருக்களையும் கட்டிடங்களையும் பண்டிகை விளக்குகளில் அலங்கரித்து, பண்டிகைகான ஏற்பாடுகளை மேற்கொண்டு கலகலப்பான கொண்டாடங்களை மேற்கொள்கின்றனர். திகைப்பூட்டும் பட்டாசுகள் வெடித்து, சத்தம் மற்றும் ஒளியின் காட்சியை உருவாக்குகின்றன. இது தீய சக்திகளை பயமுறுத்தவும், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் கொண்டாடவும் உதவுகிறது.
ஜனவரி மாதத்தில் சந்திர புத்தாண்டைப் போலவே தீபாவளியும் ஒரு புதிய தொடக்கமாக கருதப்படுகிறது. பலர் தங்கள் வீட்டை சுத்தம் செய்து, புதுப்பித்து, அலங்கரித்து, வரவிருக்கும் ஆண்டிற்கான தயாரிப்பில் புதிய ஆடைகளை வாங்குகிறார்கள்.
இந்துக்கள் தீபாவளிக் கதையை அவர்கள் வசிக்கும் இடத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார்கள். ஆனால் மக்கள் எங்கு கொண்டாடினாலும் பொதுவான தீம் ஒன்று உள்ளது, அது தீமையைத் தாண்டிய நன்மையின் வெற்றி ஆகும்.
தென் இந்தியாவில், பல்லாயிரக்கணக்கான மக்களை சிறையில் அடைத்த அசாமின் சக்திவாய்ந்த மன்னன் அசுரன் நரகாசுரனை வென்றதை தீபாவளிப் பண்டிகை என்று கொண்டாடுகின்றனர். மக்களைப் பல இன்னல்களுக்கு உட்படுத்திய அசுரன் நரகாசுரனை அடக்கி, வதம் செய்து, கைதிகளை கிருஷ்ணர் விடுவித்தார் என்பது நம்பிக்கை. தமிழ் மாதமான ஐப்பசி-யில் (துலா மாதம்), அமாவாசைக்கு முந்தைய 'நரக சதுர்த்தசி' திதியில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
முதல் நாளே அடுப்பை சுத்தம் செய்து, ஒரு பானையில் சுண்ணாம்பு அல்லது திருநீர் தடவி, குங்குமப் பொட்டு வைத்து, மறுநாள் எண்ணெய்க் குளியலுக்குத் தண்ணீர் நிரப்பி வைப்பதுடன் தீபாவளி நாளுக்கான கொண்டாடங்கள் தொடங்கும். வீட்டைக் கழுவி, காவி (ரெட் ஆக்சைடு) கொண்டு கோலம் இட்டு அலங்கரிக்கப்பர். பூஜை அறையில் வெற்றிலை, பாக்கு, பூ, சந்தனம், குங்குமம், மஞ்சள் தூள் போட்டு காய்ச்சப்பட்ட நல்லெண்ணெய், குளியல் பொடி, மஞ்சள் தடவிய புத்தாடைகள் ஆகியவற்றை முதல் நாள் இரவே எடுத்து வைப்பதும் வழக்கம். பட்டாசுகள் வெடிப்பது தீபாவளி பண்டிகையின் சிறப்பு கொண்டாட்டம் ஆகும்.
சில சமூகங்கள் நரகாசுரனைக் கொல்லும் போது, பகவான் கிருஷ்ணர் அவனுடைய கடைசி விருப்பத்தைக் கேட்டார் என்று நம்புகிறார்கள். அதற்கு பதிலளித்த நரகாசுரன், தனது வாழ்க்கையின் கடைசி நாளை பிரமாண்டமாக அனுபவிக்க விரும்புவதாக கூறியதால் தீபாவளி கொண்டாடப்படுகிறது என்றும் அதற்காகவே பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன என்றும் நம்பப்படுகிறது. அந்த நடைமுறையை தொடர்ந்தே இன்றும் தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் கருதப்படுகிறது.
இந்தியாவின் சில பகுதிகளில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் அரக்கர்களின் உருவ பொம்மைகளை எரிக்கிறார்கள். இந்து புராணங்களில் உள்ள முக்கிய கதைகளில் ஒன்றான ராமயனத்தின் படி, தீபாவளி என்பது ராமர், அவரது மனைவி சீதா தேவி மற்றும் சகோதரர் லட்சுமணன் ஆகியோருடன் 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிய நாள் எனக் கூறுகிறது. அசுர மன்னன் ராவணனை வீழ்த்திய ராமனுக்கு கிராம மக்கள் அளித்த உற்சாக வரவேற்பே தீபாவளி என்று இந்தக் கதை கூறுகிறது.
இந்த நம்பிக்கையைத் தொடர்ந்ததே தலை தீபாவளியின் போது புதுமணத் தம்பதிகள் மணப்பெண்ணின் பெற்றோர் வீட்டிற்குச் செல்லும் பழக்கம் என்றும் கூறப்படுகிறது. மேலும் தீபாவளி கொண்டாட்டங்களில் கோயிலுக்குச் செல்வது, ஆடைகள் மற்றும் நகைகளை பரிசாக அளிப்பது, இனிப்புகளை பரஸ்பரம் பரிமாறுவது மற்றும் பெரியவர்களின் ஆசிகளைப் பெறுவது ஆகியவை அடங்கும்.
தீபாவளியின் போது இந்து தெய்வமான லட்சுமியையும் மக்கள் கொண்டாடுகிறார்கள். செழிப்பு, செல்வம் மற்றும் கருவுறுதல் ஆகியவற்றின் தெய்வமான லக்ஷ்மி தேவி, தீபாவளியின் இரவில் தனது கணவனாக இந்து மதத்தின் மிக முக்கியமான கடவுள்களில் ஒருவரான விஷ்ணுவைத் தேர்ந்தெடுத்ததாக தீபாவளியைப் பற்றியக் காதல் கதை கூறுகிறது.
மேற்கு இந்தியாவில், இந்து மும்மூர்த்திகளுள் பாதுகாக்கும் கடவுளான விஷ்ணு பகவான், அசுர மன்னன் பாலியை நிகர் உலகத்தை ஆள அனுப்பிய நாளைக் குறிக்கிறது. மற்ற கலாச்சாரங்களில், தீபாவளி அறுவடை மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஒத்துப்போகிறது. பல தீபாவளிக் கதையை இருப்பினும், எல்லா நம்பிக்கைகளிலும் தீபாவளி புதிய தொடக்கங்கள் பெற்று, இருளிலிருந்து ஒளிரும் நாளாகிறது.
தீபாவளி என்பது கடன்களை தீர்த்து சமாதானம் செய்யும் நேரமும் கூட. மக்கள் தொடர்பை இழந்த அன்புக்குரியவர்களை அணுகி குடும்ப மறு இணைவுகளை ஏற்பாடு செய்வது வழக்கம். கடந்த காலங்களில், தீபாவளி நல்லெண்ணத்தின் அடையாளமாக, சர்ச்சைக்குரிய இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கான தேதிகள் மாறும். ஏனெனில் அது இந்து சந்திர நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டது. திருவிழா பொதுவாக அக்டோபர் நடுப்பகுதிக்கும் நவம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் வரும். இந்த ஆண்டு (2022), தீபாவளி நவம்பர் 24, திங்கள், இன்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை அன்று கொண்டாட்டங்கள் அதிகாலையில் துவங்குகின்றன. குடும்பத்தின் மூத்த உறுப்பினர் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் தலையிலும் காய்ச்சிய நல்லெண்ணெய் வைத்துவிடுவர். குடும்பத்தில் இளையவர் தொடங்கி முதியவர் வரை குளித்து, புத்தாடை அணிந்து அசுர மன்னன் நரகாசுரனைக் கொன்றதைக் குறிக்குமாறு பட்டாசுகளை வெடிக்கின்றனர்.
தீபாவளி கொண்டாட்டங்களின் இன்னொரு தனி அம்சம் தீபாவளி லேகியம். இஞ்சி, வெல்லம், ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த லேகியம், தீபாவளி அன்று நாம் உண்ணும் அதிகப்படியான உணவை ஜீரணிக்க உதவி உடலைத் தூய்மைப்படுத்துகிறது.
குலதெய்வங்களுக்கு காலையில் பூஜை செய்வது வழக்கம். காலை உணவில் முறுக்கு, பஜ்ஜி, மிக்சர் போன்ற கார வகைகள், இனிப்பு வகைகள் மற்றும், இட்லி அல்லது தோசை பரிமாறப்படும். நாள் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும் மாலையில் விளக்குகள் ஏற்றியும் கொண்டாட்டங்கள் தொடரும். தமிழகத்திலே பெரும்பாலான பட்டாசு உற்பத்தி ஆலைகள் இருப்பதால், இங்கு பட்டாசுகளுக்கு பஞ்சமே இல்லை என்பதால் தமிழ்நாட்டில் பிற மாநிலங்ககளை விட டமால் டுமீல் தீபாவளி தான்…
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!