கோவை வரும் மதுரை-ஷோரனூா் ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கம்: சேலம் ரயில் ரத்து

published 2 years ago

கோவை வரும் மதுரை-ஷோரனூா் ரயில் போத்தனூர் வரை மட்டுமே இயக்கம்: சேலம் ரயில் ரத்து

கோவை: கோவை- போத்தனூா் இடையே நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக மதுரை-ஷோரனூா் ரயில்கள் நாளை (31-ஆம் தேதி) முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"கோவை- போத்தனூா் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாகத் தினமும் மதியம் 12.45 மணிக்குக் கோவை ரெயில் நிலையம் வந்தடையும் மதுரை - கோவை தினசரி ரயில் (எண்: 16722) நாளை (31-ஆம் தேதி) முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

தினமும் காலை 11.10 மணிக்குக் கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் ஷோரனூா் - கோவை ரயில் (எண்: 06458) நாளை (31-ஆம் தேதி) முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை ஷோரனூா்- போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்- கோவை இடையே இயக்கப்படாது.

இதேபோன்று, கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) நாளை (31-ஆம் தேதி) முதல் நவம்பர் 15-ஆம் தேதி வரை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் போத்தனூா், இருகூர் வழித்தடத்தில் இயக்கப்படும்.

ஈரோட்டில் ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கோவை - சேலம் ரயில் நாளை (31-ஆம் தேதி) முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

கோவையிலிருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் கோவை - சேலம் ரயில் (எண்: 06802) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சேலத்திலிருந்து மதியம் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை ரயில் (எண்: 06803) அக்டோபர் 31-ஆம் தேதி முதல் நவம்பர் 29-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe