கோவை வந்த சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா ஜோதி

published 2 years ago

கோவை வந்த சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா ஜோதி

கோவை: தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது.

இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த ஜோதி வந்தடைந்தது. இதனை தொடர்ந்து  பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.

மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை இயக்குனர் அருணா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்த பேரணி சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தியபடி ரேஸ்கோர்ஸ் வரை சென்றடைந்தது.

முடிவில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் இசைக்கேற்றபடி  நடனமாடி நூற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe