263+ திட்டப் பணிகள் தொடக்கம்: 'அடுத்த லெவெலுக்கு' முன்னேரும் கோவை

published 2 years ago

263+ திட்டப் பணிகள் தொடக்கம்: 'அடுத்த லெவெலுக்கு' முன்னேரும் கோவை

கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் ரூ. 5.59 கோடி மதிப்பீட்டில் 9 முடிவுற்ற பணிகளுக்கான திறப்பு விழா மற்றும் ரூ. 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு தொடங்கி வைத்தார். மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா வரவேற்புரை ஆற்றினார்.
முன்னதாக கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வாலாங்குளம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை  அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி வரைபடத்தைப் பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா விளக்கிக் கூறினார். மேலும், இந்த ஆய்வின்போது நீர்வழிப் பாதைகளைப் பார்வையிட்டனர்.  இதைத்தொடர்ந்து ஆடிஸ் வீதியில் ரூ2.50 கோடி மதிப்பீட்டில்  நூலக அறிவுசார் மைய கட்டிட பணியை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து வடவள்ளி ரேவதி நகரில் 24 மணி நேரக் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பின்னர் மாநகராட்சி வளாகத்தில் புகைப்பட கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டு அரசின் ஓராண்டுக் கால சாதனை மலர் வெளியிடப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe