கல்லறைத் திருநாளையொட்டி கோவையில் சிறப்புப் பிரார்த்தனை

published 2 years ago

கல்லறைத் திருநாளையொட்டி கோவையில் சிறப்புப் பிரார்த்தனை

கோவை: கோவையில் கல்லறைத் திருநாளையொட்டி கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் நவம்பர் 2-ஆம் தேதி கல்லறை திருநாள் கடைபிடிக்‍கப்பட்டு வருகின்றது.  கல்லறைத் திருநாளை முன்னிட்டு கிறிஸ்தவ மக்‍கள் தங்களது முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையை சீரமைத்து அலங்கரிக்‍கும் பணியில் ஈடுபட்டு சிறப்பு பிரார்த்தனைகள் செய்வது வழக்கம்.

அந்த வகையில் கோவை திருச்சி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ.கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. கோவை காந்திபுரம் சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலய தலைமை போதகர் ஆயர் டேவிட் பர்னபாஸ் சிறப்பு பிரார்த்தனைகள் செய்தார்.

இதில் கிறிஸ்தவ மக்கள் அநேகர்  தங்களது  முன்னோர்களின் கல்லறையில் இருக்கும்  சீரமைத்து வர்ணம் பூசி கல்லறைகளை அலங்கரித்து  மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து பலர் தங்களது குடும்பத்தினருடன்  கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் தெரிவித்துக் கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe