கொஞ்சம் மிளகு பொடியும் சேர்த்து போடுங்க...

published 2 years ago

கொஞ்சம் மிளகு பொடியும் சேர்த்து போடுங்க...

நம்மளுடைய சமையல் அறையில் நம்ம பயன்படுத்தர மசாலா பொருட்கல்ல முக்கியமானது மஞ்சள், கிட்டத்தட்டத் தினமும் பயன்படுத்தப்படுகிறது. இதில் நிறையப் பயன்கள் இருக்குனு நம்ம எல்லோருக்குமே தெரியும்.

அவற்றுள் சில:
 உடலின் உள்ளுறுப்புக்களுள் இருக்கும் வீக்கத்தைக் குறைத்தல்

 இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்தல்

 புற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துதல்

 வாதத்தைச் சரி செய்தல்

 நீரிழிவு நோயினால் ஏற்படும் சிறுநீரக கோளாறுகளைக் கட்டுப்படுத்துதல்

 ‘ஆல்சிமர்’ எனப்படும் மறதி நோயைச் சரி செய்தல்

 மன அழுத்தத்தைக் குறைத்தல்

 முட்டிகளில் ஏற்படும் வலி, வீக்கம், இறுக்கத்தைச் சீர் செய்தல்

 சரும நோய்களைக் கட்டுப்படுத்தி முதிர்ச்சியைக் குறைத்தல்

 சுற்றுச்சூழல் மாசுகளினால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கட்டுப்படுத்துதல்

 வயது முதிர்வினால் ஏற்படும் விளைவுகளைக் குறைத்தல்

 கண் புரை நோயைத் தவிர்த்தல் என்பன.

இவை நம்முள் பலருக்குத் தெரிந்ததே என்பதில் ஆச்சரியம் இல்லை. எனினும், நாம் மேலும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் என்னவென்றால் நாம் சாப்பிடும் மஞ்சளில் சிறிது அளவு மட்டுமே நம் இரத்தத்தில் கலந்து நமக்குப் பயனளிக்கிறது. நம் உடம்பிற்குத் தேவையான அளவிற்கான பயன்களை நாம் பெறவேண்டுமெனில் நாம் அரிசியை உண்ணும் அளவை விட மஞ்சளை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனை எவ்வாறு ஈடு செய்வது என்ற கேள்விக்கும் அறிவியலே பதிலையும் வைத்திருக்கிறது என்பது தான் வியப்பு. அந்த பதில் என்னவென்றால் நாம் மஞ்சள் சேர்த்துச் சமைக்கும் ஒவ்வொரு உணவிலும் சிறிதளவு மிளகு பொடியைச் சேர்ப்பது என்பது தான்.

மிளகு பொடியில் இருக்கும் ‘பெப்பெரின்’ என்னும் வேதிப்பொருள் மஞ்சளிலிருக்கும் ‘குர்குமின்’ என்னும் வேதிப்பொருளை எளிதாக இரத்தத்தில் கலக்க உதவுவதே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe