மனைவி மகள் ஊருக்குச் சென்றதால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை

published 2 years ago

மனைவி மகள் ஊருக்குச் சென்றதால் கணவன் தூக்குப் போட்டு தற்கொலை

கோவை: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு குமார் (30). சூலூரை அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்த இவருக்கு மூன்று வயதில் மகள் ஒருவர் உள்ளார். பிரபு குமார் தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணிபுரிந்து வந்தார். அவருக்குக் கடுமையான குடிப்பழக்கம் இருந்ததன் காரணமாக அடிக்கடி அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 
இந்நிலையில் மதுரையில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என அவரது மனைவி பிரியா பிரபு குமாரை அழைத்தபொழுது அவர் அதற்கு மறுத்துள்ளார். இதையடுத்து பிரியா அவரது மகளை அழைத்துக் கொண்டு மதுரைக்குச் சென்றார்.
இதனால் மனமுடைந்த நிலையிலிருந்த பிரபு குமார் நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe