கோவைக்கு வந்த அந்தமான் கவுன்சிலர்கள்..! எதற்கு தெரியுமா?

published 2 years ago

கோவைக்கு வந்த அந்தமான் கவுன்சிலர்கள்..! எதற்கு தெரியுமா?

கோவை: திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீடுகளிலிருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை எனத் தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய அந்தமானிலிருந்து மாவட்டக் கவுன்சிலர்கள் கோவை வந்தனர்.

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் 27-வது வார்டிலுள்ள நவ இந்தியா, எஸ். டி. வி நகரில் ஆய்வு நடத்தினர். கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். அந்தமான் நகரின் நகராட்சி சபை பிளேயர் துறைமுகத்தின் தலைவர் கவிதா உதயகுமார் தலைமை தாங்கினார்.

நகரமன்ற உறுப்பினர்கள் சாகுல் ஹமீது, லட்சுமி கணேசன், ரவிச்சந்திரன், வெற்றிவேல், பாண்டிசெல்வி, தர்மேந்திர நாராயணன், கருணாநிதி, செல்வராணி, உதவி பொறியாளர் வகாப் அடங்கிய 14 நபர்கள் கொண்ட குழு நேரில் சென்று பார்வையிட்டு, குப்பைகள் சேகரிக்கும் முறை குறித்து ஆய்வு செய்தனர்.

உடன் மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொதுச்சுகாதார குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் சித்ரா வெள்ளியங்கிரி, அம்பிகா, தனபால், உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர், சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe