குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி பின்னோக்கி நடைபோட்ட மாணவர்கள்

published 2 years ago

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி பின்னோக்கி நடைபோட்ட மாணவர்கள்

குழந்தைகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவதைத் தடுக்கும் விதமான  விழிப்புணர்வை ஏற்படுத்த கோவையில் கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட பின்னோக்கி நடக்கும் வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் ஒரு மணி நேரத்திற்கு 6 குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக போக்சோ எனப்படும் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை அதிகமாக பதிவு செய்து வருகின்றது கோவை மாநகர காவல்துறை.

இதனிடையே குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தியும், இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் அதிக அளவில் செல்ல வேண்டும் என்ற நோக்கிலும் கோவையில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற வாக்கத்தான்  நிகழ்ச்சி நடைபெற்றது.

யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த வாக்கத்தான் நிகழ்வை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

இதில் வித்தியாசமான முயற்சியாக கல்லூரி மாணவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த வாசங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பின்னோக்கி நடைபோட்டனர்.

இதுகுறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், இதனை தடுக்க வலுவான சட்டங்களும், பொதுமக்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் தெரிவித்தனர்

நம்ம ஊரு கனெக்‌ஷன்

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்த செய்திக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe