திடீர் மழையால் குளிர்ந்தது கோவை: மக்கள் மகிழ்ச்சி

published 2 years ago

திடீர் மழையால் குளிர்ந்தது கோவை: மக்கள் மகிழ்ச்சி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வந்தது. கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு வெயிலின் தாக்கம் ஓரளவு அதிகமாகவே இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. ஆனால் மாலை நேரத்தில் மட்டும் லேசான தூரலோடு குளிர்ந்த காற்று வீசி வந்தது.
இந்நிலையில்  இன்று காலை திடீரென மிதமான மழை பெய்தது. இதனால்  குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காலை பெய்த மழையினால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வெப்பத்தின் அளவு சற்று குறைந்தது. மாணவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் குடை பிடித்தபடி சென்றனர். சிலர் ஆபத்தை உணராமல் மோட்டார் சைக்கிளில் குடைபிடித்துச் சென்றனர்.
கோவை கணபதி, வடவள்ளி, சரவணம்பட்டி, இடையர்பாளையம், கணுவாய், பீளமேடு, கவுண்டம்பாளையம்,  பெரிய நாயக்கன்பாளையம், நரசிம்ம நாயக்கன்பாளையம்,  ஒப்பணக்கார வீதி, டவுன் ஹால்,  வடகோவை,  ஆர். எஸ் புரம் உள்ளிட்ட பகுதியில் மிதமான மழை பெய்தது.
மேலும் விவசாயிகள் இந்த மழையினால் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வரும் நாட்களில் இதே போல மழை பெய்தால் வெப்பத்தின் அளவு குறையத் தொடங்கும். மழையினால் முக்கிய பகுதிகளில் உள்ள சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe