செகந்திராபாத்தில் இருந்து கோட்டயத்திற்குக் கோவை வழியாக சிறப்பு ரயில்

published 2 years ago

செகந்திராபாத்தில் இருந்து கோட்டயத்திற்குக் கோவை வழியாக சிறப்பு ரயில்

கோவை: சபரிமலை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், கோவை வழித்தடத்தில் செகந்திராபாத்-கேரள மாநிலம் கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"செகந்திராபாத்தில் இருந்து நவம்பர் 27-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.50 மணிக்குப் புறப்படும் செகந்திராபாத்-கோட்டயம் சிறப்பு ரயில் (எண்:07125) மறுநாள் இரவு 9.00 மணிக்கு கோட்டயம் நிலையத்தைச் சென்றடையும்.

இதேபோன்று நவம்பர் 28-ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு 11.15 மணிக்கு கோட்டயத்திலிருந்து புறப்படும் கோட்டயம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் (எண்:07126) 30-ஆம் தேதி காலை 4.00 மணிக்கு செகந்திராபாத் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது எா்ணாகுளம், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூா், நெல்லூா், ஓங்கோல், சிராலா, தெனாலி, குண்டூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலானது செகந்திராபாத்தில் இருந்து கோவைக்கு மதியம் 3.07 மணிக்கு வந்து 3.10-க்கு புறப்பட்டுச் செல்லும். கோட்டயத்திலிருந்து கோவைக்குக் காலை 4.37-க்கு வந்து 4.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.  

பிகார் மாநிலம் தா்பங்காவில் இருந்து நவம்பா் 21-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 9.15 மணிக்குப் புறப்படும் தா்பங்கா-எா்ணாகுளம் வாராந்திர ரயில் (எண்: 05555) வியாழக்கிழமைகளில் காலை 6.00 மணிக்கு எா்ணாகுளத்தைச் சென்றடையும்.

எா்ணாகுளத்தில் இருந்து நவம்பா் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 9.00 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம்-தா்பாங்கா வாராந்திர ரயில் (எண்: 05556) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு தா்பங்காவைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, திருச்சூா், பாலக்காடு, கோவை, ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்பூா், ரூா்கேலா, ஹாட்டியா, ராஞ்சி, தன்பாத் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது தா்பங்காவில் இருந்து கோவைக்கு இரவு 12.40 மணிக்கு வந்து 12.45-க்கு புறப்பட்டுச் செல்லும். எா்ணாகுளத்தில் இருந்து கோவைக்குக் காலை 12.50-க்கு வந்து 12.55 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

திருப்பூர்-வஞ்சிப்பாளையம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாகர்கோவில்-கோவை ரயில் (எண்: 16321) நாளை 2 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe