சோனியா காந்தி நகரில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

published 2 years ago

சோனியா காந்தி நகரில் அடிப்படை வசதிகளைச் செய்து தரக்கோரி ஆட்சியரிடம் மனு

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் கிணத்துக்கிடவு பகுதி சோனியா காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
"கிணற்றுக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடபுதூர் கிராமம் சோனியா காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.  வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டண வரி ஆகியவற்றை முறையாகச் செலுத்தி வருகிறோம்.  

ஆனால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சாலை வசதி, சாக்கடை வடிகால் வசதி போன்றவைகள் இல்லை. வீட்டுமனைகளிலிருந்து வருகின்ற கழிநீரை வெளியேற்ற முடியாமல் மழைக் காலங்களில் பெய்து வருகின்ற மழை நீர் சாக்கடை கழிவுடன் கலந்து தேங்குகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளாகிறது.

உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்துச் சொல்லியும், ஊராட்சி கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. உடனடியாக அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும்."

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe