கோவையில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்

published 2 years ago

கோவையில் பார்வையாளர்களைக் கவர்ந்த ஆண்டாள் நாட்டிய நாடகம்

கோவை: கோவை  கிக்கானி மேல்நிலைப்பள்ளியில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடந்த, 'சூடிக்கொடுத்த நாச்சியார்' எனும் நாட்டிய நாடக நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சென்னை பரத நாட்டியாலயாவை சேர்ந்த கலைச்சுடர்மணி லதா ரவி குழுவைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் பங்கேற்றனர்.

'ஆண்டவனை ஆண்ட கோதையின் அற்புத காவியம்' எனும் தலைப்பில், ஆண்டாளின் பிறப்பு, இளம் பருவ ஆண்டாளின் அற்புத கதை, கடவுள் வழிபாடு என அனைத்தும், நாட்டிய மாணவியரின் நாட்டியத்தில் அற்புதமாக வெளிப்பட்டது.

இவ்விழாவில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe