நீலகிரி மலைப்பாதையில் உருண்டு விழும் பாறைகள்..!

published 2 years ago

நீலகிரி மலைப்பாதையில் உருண்டு விழும் பாறைகள்..!

நீலகிரி : குன்னூர்--மேட்டுப்பாளையம் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. நீலகிரி மாவட்டம், குன்னூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு கனமழை பெய்தது.

பர்லியார் பகுதியில், 14 மி.மீ., மழை பதிவானது. இந்நிலையில், குன்னுார்-மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று காலை, 8:30 மணியளவில் பாறைகள் திடீரென உருண்டு விழுந்தன. இதனை போலீசார், தீயணைப்பு துறையினர் சென்று அகற்றினர்.

மதியம், 2:30 மணியளவில் அதே இடத்தில் மரம், செடிகளுடன் மண் சரிவு ஏற்பட்டு பாறைகளும் உருண்டது. அதிர்ஷ்டவசமாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மீண்டும் பாறைகள் அகற்றும் பணி நடந்த நிலையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன.

குன்னூரில் இருந்து சமவெளிக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பிவிடப்பட்டதால், இரண்டரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. அப்பகுதியில், நெடுஞ்சாலைத் துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe