மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் புகார்: ஸ்டீல் விலை உயர்விற்கான விசாரணை துவக்கம்

published 2 years ago

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் புகார்: ஸ்டீல் விலை உயர்விற்கான விசாரணை துவக்கம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

அகில இந்திய அளவில் இரும்பு தொழிற்சாலைகள் கூட்டமைப்பு செயற்கையான விலை ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஸ்டீலின் விலையேற்றம் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.

கிலோ  40 ரூபாயாக இருந்த ஸ்டீல் விலை இப்போது கிலோ 80 ஆக அதிகரித்துள்ளது.  15 மாதங்களில் 100 சதவீதம் விலை ஏறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அரசின் உள்ளாட்சி நிர்வாகம்,  பொதுப்பணித்துறை,  வீட்டுவசதி வாரியம் உட்பட பல்வேறு துறைகளில் கட்டுமான விலை வெகுவாக கூடியுள்ளது.

ஸ்டீல் விலையேற்றம் தொடர்பாகக்  கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கம் சார்பில் இந்தியப் போட்டி ஆணையத்தில் (Competition commission of India) ஸ்டீல் தொழிற்சாலைகள் கூட்டமைப்பு மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது மற்றும் நியாயமான விலையில் ஸ்டீல் விற்பனை செய்வது தொடர்பாகப் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஸ்டீல் தொழிற்சாலை கூட்டமைப்பின் மீது  விசாரணை நடத்த ஸ்டீல் போட்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புகார் அளித்த ஒப்பந்ததாரர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஸ்டீல் தொழிற்சாலைகள் நிர்வாகத்தினரிடம் புதுடில்லியில் உள்ள போட்டி ஆணையத்தில் வரும் 26-ம் தேதி விசாரணை நடத்தி பதில் பெற்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe